குடும்ப அட்டைதாரர்களுக்கு குஷி.. இனிமேல் ரேஷனில் நிம்மதி..பார்டரில் குவிந்த பார்வை.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் நன்மை கருதி, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. இதனால், அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் ஓரளவு குறைந்து வருகிறது. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை..

அண்டை மாநிலம்: குறிப்பாக கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அவ்வப்போது கடத்தப்பட்டிருக்கிறது.. தமிழக எல்லைகளில் இதற்காகவே சில புரோக்கர்கள் இருக்கிறார்களாம். இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு அரிசியை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்று ரேஷன்தாரர்கள் புகார்கள் சொல்ல துவங்கினர். இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தற்சமயம் ஓரளவு கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், வெறும் 5 மாதங்களில், 3,660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரேஷன் பொருளை கடத்தி 3,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளியான லிஸ்ட்: இதுகுறித்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் ஜோஷு நிர்ம ல்குமார் ஒரு புள்ளிவிவரத்தையே வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"கடந்த ஐந்து மாதங்களில் 10,193 குவிண்டால் ரேஷன் அரிசி, 2,310 லிட்டர் மண்ணெண்ணெய், 1,003 கியாஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இக்குற்றங்களில் ஈடுபட்ட 3,794 பேர் கைது செய்யப்பட்டனர். 568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 991 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் கள்ளச் சந்தை தடுப்பு, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல்கள்: அருகில் உள்ள மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அரிசி கடத்தலைத் தடுக்க அம்மாநில வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., விஜய கார்த்திக் ராஜ் தலைமையில் 16 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பக்கத்து மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து வாகன தணிக்கை தொடர்ந்து செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்" என்று ஜோஷி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
பெருகும் நம்பிக்கை: தமிழக அரசின் இதுபோன்ற அதிரடிகளால், ரேஷன் பொருட்களின் கடத்தல்கள் குறையும் என்றும், குடும்ப அட்டைதாரர்களின் அதிருப்தியும் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications