"ஆடு, கோழி தான் சாப்பிடுதா?" செங்கோட்டையன் பேச்சால் ரேஷன் அரிசியை முன்வைத்து காரசார விவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அரிசியை மக்கள் ஆடு, கோழிக்குத் தீவனமாகத்தான் பயன்படுத்துகின்றனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு, ஏழைகள் சாப்பிடும் உணவைக் கொச்சைப்படுத்துவதா என கே.என்.நேரு, எ.வ.வேலு, உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று, திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "நாங்கள் பொறுப்பில் இருந்த 5 ஆண்டு காலத்தில் நெல் மழையில் நனையாமல் பாதுகாத்தோம். ஆனால், நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்தால் நெல் மூட்டைகள் நனைந்து கிடக்கின்றன. அதுவும் பாதுகாப்பற்ற திறந்தவெளியில் தான் வைக்கப்பட்டுள்ளன.

Ration Rice

நாங்கள் மழை வரும்போதே உடனுக்குடன் அதனைப் பாதுகாப்பான இடங்களிலும் குடோன்களிலும் வைத்தோம். அதனால்தான், கருப்பு நிற அரிசி புழக்கத்தில் இருந்த காலம் மாறி, வெள்ளை அரிசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நெல் மழையில் நனையாமலும் முளைக்க விடாமலும் நாங்கள் தடுத்தது தான், இப்போதும் ரேஷன் கடைகளில் வெள்ளை அரிசி கிடைப்பதற்கு முக்கியக் காரணம்" என்றார்.

அதற்கு அமைச்சரும் அவை முன்னவருமான செங்கோட்டையன் பேசுகையில், "ரேஷனில் அரிசி வாங்கும் அனைவரும் ஆடுகளுக்கும் கோழிகளுக்கும்தான் தீவனமாக பயன்படுத்துகிறார்கள் என்பது நாடு அறிந்த உண்மை. அதனால் சன்னரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர், தொகையை உயர்த்தி வழங்கினார். எதிர்காலத்தில் இந்த மக்கள் சன்ன ரக அரிசியைத்தான் விரும்புவார்கள்." என்று தெரிவித்தார்.

பின்னர், எழுந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "அவை முன்னவர் என்ன அர்த்தத்தில் அப்படி சொல்கிறார்? ஆட்டுக்கும் மாட்டுக்கும்தான் ரேசன் அரிசி பயன்படுகிறதா? ரேஷன் அரிசியை தற்போது அனைத்து மக்களும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ரேஷன் அரிசி சாப்பிடுகிற போது சர்க்கரை அளவு குறைகிற காரணத்தால் எல்லா மக்களும் அதை பயன்படுத்துகின்றனர்." என பதிலளித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து, "முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அண்ணன் நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அவர் அங்கேயே நெல்லை உற்பத்தி செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால், அண்ணன் ஒரு பரம ஏழையைப் போல ரேஷன் அரிசி சாப்பிடுகிறார் என்ற தகவல் இன்றைக்குத்தான் எங்களுக்குத் தெரியவருகிறது." என்றார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திமுக ஆட்சியில் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசியை பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன். ஐந்தாண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இந்த இடத்தில் தான் அவை முன்னவர் அமர்ந்திருந்தார். என்றைக்காவது இந்த பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி சரியில்லை என்று கேட்டிருப்பாரா?

அவை முன்னவராக இருப்பவர் அவைத் தலைவருக்கு உறுதுணையாக இருந்து அவையை சுமுகமாக நடத்த உதவ வேண்டும். ஆனால், அவரே பிரச்சனையை உண்டாக்கிவிட்டால் எப்படி? ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, மாடு சாப்பிடுவதாக கொச்சைப் படுத்தலாமா" என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, "ரேஷன் அரிசி இதற்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல், மக்கள் பயன்படுத்தும் வகையில் அது இருக்கும்" என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எங்களது குடும்பம் ரேஷன் கடையில்தான் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம். ஆனால் இப்போது ரேஷன் அரிசியை யாரும் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. அதனை இட்லி மாவுக்கு பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடையில் கொடுக்கும் அரிசியை சாப்பிடக் கூடிய அரிசியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய் முயற்சி எடுத்தார். இதற்காகத்தான் சன்ன ரக அரிசியின் உற்பத்தியை அதிகரித்து கொள்முதல் செய்ய அதிகமான ஊக்கத்தொகையை முதல்வர் அறிவித்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+