அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. ரேஷன் வாங்க போறீங்களா? இதை நோட் பண்ணுங்க.. அரசு அதிரடி
சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான அனைத்து பணிகளும் உச்சக்கட்ட பரபரப்பில் நடந்துவரும் நிலையில், அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது..
தமிழக அரசு அறிவித்து உள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.. இதற்கான பயனாளிகள் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்த நிலையில், விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றன.
உரிமைத்தொகை: மேலும், சென்னையில் 3 நாட்கள் விடுபட்டவர்களுக்கு நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 50,427 பேர் பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் அதாவது 23 ந்தேதி முதல் துவங்கி உள்ளன.. விண்ணப்பித்த படிவங்களில் முறையான தகவல் இல்லாத சந்தேகம் உள்ள படிவங்களை மட்டும் ஆய்வு செய்கிறார்கள்.
இந்த பணிகள் இந்த அளவுக்கு துரிதமாக நடந்துள்ளதற்கு காரணம், ரேஷன் கடைகளே.. கடந்த மாதம், ரேஷன் கடைகளுக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் முக்கிய அறிவுறுத்தல்கள் சென்றிருந்தன. அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த திட்டம் எந்த சிறு தடங்கலும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்கள்: அதேபோல, தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு கடந்த ஜூலை 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்தது.. மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறையை ரத்து செய்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதனால், அன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கின. மேலும், இந்த விடுமுறை இழப்பை ஈடு செய்யும் விதமாக இந்த மாதம் 26ம் தேதி, ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அரசு அந்த அறிவிப்பில் கூறியிருந்தது.
அதன்படியே, நாளைய தினம் சனிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், தொடர்ந்து 2 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாயுமானவர் திட்டம்! இன்றும் நாளையும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications