நீங்க ரேஷன் அட்டைதாரர்களா.. இதோ உங்களுக்காகவே UPI வசதி அறிமுகம்.. இவ்ளோ ஸ்பெஷல்களா? திமுக அரசு அதிரடி
சென்னை: டிஜிட்டல் மயமாகிறது ரேஷன் கடைகள்.. இந்த புது திட்டத்தைதான், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கிறார்.. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பெறும் வசதிகள் என்னென்ன தெரியுமா?
மக்கள் மத்தியில், பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனையாகும்.. இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டுகளில் வைத்து கொள்ள தேவையேயில்லை.. சின்ன பெட்டிக்கடை என்றாலும்கூட, யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனையை செய்து கொள்கிறார்கள்.

யுபிஐ: தேசியமயாக்கப்பட்ட வங்கிகள் + தனியார் வங்கிகள் என யுபிஐ (யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்) வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதிகள் அதிகரித்துவிட்டதால், தமிழகத்தின் 23 கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி இப்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை,, முதல் கட்டமாக காஞ்சிபுரத்தில் உள்ள, 602 ரேஷன் கடைகளிலும், கடந்த மே 5ம் தேதி துவக்கப்பட்டது...
இது வெற்றிகரமாக செயல்பட்டு வரும்நிலையில், இன்றைய தினம், தமிழ்நாடு முழுதும் விரிவுபடுத்தப்படுகிறது.. மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக கூட்டுறவு துறை சார்பில், தனியார் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாம்..
நியாயவிலை கடைகள்: எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிஜிட்டல் முறையினால், பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கக்கூடும்.. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
தனியார்மயம்: தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கி சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உள்ளதால், இந்த அறிவிப்பானது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கூகுள் பே: ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உள்ளன. இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி கள் போன்றவற்றில், "கியு ஆர் கோடு" ஸ்கேன்' செய்து, "கூகுள் பே, பேடிஎம்" போன்றவற்றில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்..
ஏற்கெனவே கூட்டுறவு துறைக்குக்கீழ் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட், கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் தனியார் வங்கிகள் மூலம் UPI வசதி வந்துவிட்டது.
பரிமாற்றம் எளிது: கூட்டுறவுத் துறைக்குக் கீழ் 23 வங்கிகள் உள்ளன.. இந்த வங்கிகளிலும் UPI interface-ஐ ஏற்படுத்திவிட்டால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி ரேஷன் கடைகள் வரை UPI பரிமாற்றம் எளிதாகிவிடும்.. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் UPI வசதியை வருவதால், எந்தவொரு தங்கு தடையும் பொதுமக்களுக்கு எழ வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications