ரேஷன் கடைகள் இன்று இயங்கும்.. கலைஞர் உரிமைத் தொகை டோக்கன் பெற்றவர்கள் செல்லலாம்!
சென்னை: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு டோக்கன் மற்றும் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகிறது.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் அருகே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் உரிய ஆவணங்களுடன் அவர்கள் எந்த தேதியில் எந்த நேரத்திற்கு ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்ற தகவல் இருக்கும்.
அதன்படி அவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து கொடுத்தால் ரேஷன் கடை ஊழியர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருவர். இந்த திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக இன்றும் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று இயங்கும். இன்றைய தினம் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு செல்லலாம். இந்த வேலைநாளை ஈடுகட்டும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications