தமிழ்நாட்டின் பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட், ஒரு வார்த்தையும் பேசவில்லை.. ரவீனா ரவி கொண்டாடப்படுவது ஏன்?
சென்னை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட், ஒரு வார்த்தையும் பேசவில்லை... ஆனால் தமிழக ரசிகளால் பேசப்படுவது மட்டுமல்ல கொண்டாடப்படும் செய்கிறார் ரவீனா ரவி. பகத் பாசிலுடன் அவரை வைத்து போடப்பட்ட எடிட் வீடியோக்களை தேடி தேடி பதிவிட்டு மெய்சிலிர்ந்து வருகிறார்.
@raveena116 ku dialogue ilanu sonnaga aana ipa...
— Bhuvan (@UnmaturedB) July 30, 2023
Keerthi Suresh ah vida Raveena va tha celebrate panranga 😍 https://t.co/2MY4TwWpvd
ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்தவர் ரவீனா ரவி. நயன்தாரா தொடங்கி பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துவந்தவர். இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மிகச்சிறந்த டப்பிங் கலைஞரான ரவீனா ரவி அண்மைக்காலமாக நடிக்கவும் தொடங்கி உள்ளார். அப்படி நடித்த படங்கள் தான் லவ் டுடே, மாமன்னன்.

லவ் டுடே படத்தில் யோகி பாவுக்கு ஜோடியாக நடித்த போது தான் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவியை பலருக்கும் தெரிந்திருக்கும். அதன்பின்னர் அவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் நடித்தவர் தான் ரவீனா ரவி. பகத் பாசில் மனைவியாக சேலம் கொங்கு பகுதி பெண்ணாக நடித்திருப்பார். பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரவீனா ரவியிடம் மாமன்னன் படத்தில் ஒரு வசனம் கூட இருக்காது. இருப்பினும் அவரது நடிப்பை பலரும் கொண்டாடுகிறார்கள்.

மாரி செல்வராஜ் நடிக்க கூப்பிடும் போதே, நீங்க ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். நான் எடுக்கப்போற படத்துல உங்களுக்கு டயலாக்ஸ் இருக்காது. ஆனா, நல்ல கேரக்டர். ஓகேவா என்றுதெளிவாக கேட்டுவிட்டுத்தான் நடிக்க வைத்துள்ளார்.. பகத் பாசின் தீவிர ரசிகையான ரவி ரவிக்கு அவருடனே ஜோடியாக நடிக்க கிடைக்க வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்.. உடனே ஒகே சொல்லி நடித்தார்.
My goodness! Dint expect so much love would pour in for this role ! Not in my wildest dreams! #jyothi will always remain close to my heart! Thankyou @mari_selvaraj sir for this one ! And the show stealer #fahadhfaasil #rathnavelu #fafa ! pic.twitter.com/QBufuDLToD
— Raveena.S.R (@raveena116) August 2, 2023
பகத்பாசிலை கொண்டாடியவர்கள் ஏன் கொண்டாடினார்கள் என்பது அவரது சாதியவாத சிந்தனை தான் காரணம் என்றால் நிச்சயம் அவர்கள் வெட்கப்பட வேண்டும். ஆனால் அதேநேரம் பகத்பாசிலின் நடிப்பை மட்டும் கொண்டாடியவர்கள் என்றால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். பகத் பாசிலின் மனைவியாக சில காட்சிகளில் தான் வருவார். அந்த சில காட்சிகளிலும் கண்களில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் ரவீனா ரவி, இதேபோல் தான் பகத் பாசிலும். இந்த நடிப்பு தான் இன்று எடிட் செய்யப்பட்ட வீடியோக்களாக வந்துள்ளது.

பகத் பாசிலுடன் சேர்ந்து ரவீனா ரவியும் கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறார். இதையடுத்து பகத்பாசிலுடன் சேர்த்து வைத்து போடப்பட்ட எடிட் வீடியோக்களை தேடி தேடி பதிவிட்டு மெய்சிலிர்ந்து வருகிறார் ரவீனா ரவி. ரவீனா ரவி வெளியிட்டிருந்த ட்விட் பதிவில், "இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications