Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோனி பாவம் அஸ்வின்.. “ஹல்லா போல், YELLOW போல்” - சென்னைக்கு சப்போர்ட்! கதறும் சிஎஸ்கே ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியேறிய நிலையில், அந்த அணி வீரர் அஸ்வின் சென்னையை ஆதரித்து தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் 'ஹல்லா போல், கொஞ்சம் யெல்லோ போல்' என்று பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்க உள்ளது. பிளே ஆஃப் சுற்றை பொறுத்தவரை ஐபிஎல் லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையே முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

 Ravi Ashwin came support for CSK in qualifier against GT and chanted Halla bol konjam yellow bol

அதை தொடர்ந்து 3 மற்றும் 4 வது இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறும். இதில் தோல்விடைந்த அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். வெற்றிபெறும் அணி முதலாவது குவாலிபையரில் தோல்வியடைந்த அணியுடன் 2 வது குவாலிபையரில் மோதும். இதில் வெற்றி அடையும் அணி முதலாவது குவாலிபையரில் வென்ற அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

தற்போது ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2 வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதலாவது குவாலிபையரில் இன்று விளையாட உள்ளனர்.

 Ravi Ashwin came support for CSK in qualifier against GT and chanted Halla bol konjam yellow bol

3 வது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 4 வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் எலிமினேட்டரில் விளையாட இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இந்த போட்டி குறித்த பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். வழக்கமாக ராஜஸ்தான் அணி விளையாடும்போது ஹல்லா போல், கொஞ்சம் நல்லா போல் என்று பேசி அவர் வீடியோ வெளியிடுவது வழக்கம்.

ஆனால், 2 வது லீக் சுற்று போட்டிகளில் ராஜஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவியதால் அவர் மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ஹல்லா போல், கொஞ்சம் மெல்லமா போல் என தனது கோஷத்தை மாற்றிக்கொண்டார். அதன் பின் ராஜஸ்தான் வெற்றிபெற்றால் மட்டுமே இதை சொல்வேன் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் சென்னை அணியை ஆதரிப்பதாக அறிவித்து உள்ள அஸ்வின், ஹல்லா போல், கொஞ்சம் எல்லோ போல் என முழக்கத்தை மாற்றி வீடியோ வெளியிட்டு உள்ளார். இப்படி முழங்கிதான் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததாகவும், எனவே ஆளை விடுங்க அஸ்வின் என்றும் ரசிகர்கள் கருத்திட்டு கலாய்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+