Actor Ravi Mohan: கெனிஷா என் வாழ்க்கையில் அழகான துணை! ரவி மோகன் பரபரப்பு அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை நாட்களாக நான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன், எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரவி மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: கெனிஷா என் வாழ்க்கை துணை. என் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர். தோழியாக அறிமுகமான கெனிஷா, தற்போது துணையாக மாறியுள்ளார்.

ravi mohan chennai

தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமண வாழ்வை காப்பாற்ற நான் கடும் போராட்டங்களை சந்தித்தேன்.

மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல. இத்தனை நாட்களாக முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் கொண்டு தடுக்கிறார்கள்.

5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுபவித்து வந்தனர். என்னை கணவராக அல்லாமல் பொன் முட்டையிடம் வாத்தாக ஆர்த்தியின் குடும்பம் பயன்படுத்தியது.

இத்தனை நாட்களாக அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு. உண்மையோ இரக்கமோ இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை கிசுகிசுவாக மாறியது அதிர்ச்சி அளிக்கிறது.

என் மௌனம் பலவீனம் அல்ல. எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கினால் பேச வேண்டும். சட்டத்தை முழுமையாக நம்பியுள்ளேன். அது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். தந்தையாக என்னை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். ஒரு தந்தையாக எனது குழந்தைகளை பார்க்க சரியாக அனுமதிக்கப்படவில்லை.

ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச் செல்ல எடுத்த வலிகளை அவர்கள் அறிந்து கொள்வார்கள். முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவே எனது கடைசி அறிக்கை. அவர்கள் இன்னும் அதிக அழிவுக்கு ஆளாக நேரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கண்ணீரும் ரத்தமுமாக இருந்த சூழலில் உயிர்நாடியாக எனக்கு இருந்தவர் கெனிஷா. இவ்வாறு ரவி மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ravi mohan chennai

ஜெயம் ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதையடுத்து ஆர்த்தி குறித்த பேச்சுகளுக்கு அவர் பதிலடி கொடுத்திருந்தார். ஆர்த்தி தனது அறிக்கையில் என் மகன்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதால் நான் அமைதியாக இருந்தேன். 18 ஆண்டுகளாக காதல், விசுவாசம், பற்றுதலுடன் நான் யாருக்கு துணை நின்றேனோ அவர் என்னை பிரிந்து சென்றது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் உறுதியளித்த பொறுப்புகளையும் முற்றிலுமாகத் துறந்துவிட்டார்.

இப்போது வங்கியின் அறிவிப்பால் எங்களை எங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து இந்த இல்லத்தை கட்டியவரின் உத்தரவின் பேரிலேயே இது நிகழ்கிறது. என் இன்ஸ்டாகிராம் பெயர் பற்றி பேசுபவர்களுக்கும் அட்வைஸ் செய்பவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நானும் சட்டமும் முடிவு செய்யும் வரை நான் ஆர்த்தி ரவிதான். வழக்கு முடியும் வரை மீடியாக்களும் என்னை முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என கேட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+