Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 மீண்டும் திமுக ஆட்சி; அடித்துச் சொல்லும் ஆர்.டி! அப்ப விஜய் கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலிலும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

சோஷியல் மீடியா டைம் லைன் முழுக்க விஜய் அரசில் கட்சி பற்றித்தான் அதிக செய்திகள் வலம் வருகின்றன. அந்தளவுக்கு அவரை பெரிய அரசியல் சக்தியாக ஊடகங்களே கற்பனை செய்து கொண்டு உள்ளன.

 Ravindran Duraisamy comments about Vijay party

களத்தில் விஜய் கட்சியின் கிரவுண்ட் ரியாலிட்டி என்ன என்பது இன்னும் ஊகிக்க முடியாத ஒரு விசயமாகவே உள்ளது. ஆகவே, அவரது 'மூவ்' வைத்துத்தான் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியும்.

அதைவிட்டு விட்டு அவர் ஸ்டாலினை காலி செய்து விடுவார். உதயநிதிக்குப் போட்டியாக வருவார். அண்ணாமலைக்குத்தான் ஆபத்து எனப் பல பேச்சுகள் வெளிவருகின்றன. அதில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை உள்ளது என்பது 2024 தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டி விடும்.

இந்நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலில் கூட திமுகதான் வெல்லும் என அடித்துச் சொல்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அப்படித்தான் கள நிலவரம் உள்ளது என்கிறார். எப்படி? அவர் கணக்கு என்ன?

 Ravindran Duraisamy comments about Vijay party

"விஜய் இப்போது கட்சியை அறிவித்திருக்கக் கூடாது. இது ஒரு தப்புக் கணக்காகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அவரது ஆலோசகர்கள் அவரைத் தவறாக வழி நடத்துவதைப்போலத்தான் தெரிகிறது. விஜய் தனது அறிக்கையில் சாதி, மதம் பற்றிப் பேசுகிறார்.

ஆனால், மொழியை விட்டுவிட்டார். இவர் ரஜினி ரசிகராகத்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைப்போல எம்.ஜி.ஆர் ஸ்டைலை தனது படங்களில் பின்பற்றியவர்தான்.

எம்.ஜி.ஆர் மலையாளி. ரஜினி மராத்தி. இந்த இருவரையும் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைப்போல் நாளை அஜித்தையும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது அஜித் மீது விஜய்க்கு ஒரு வன்மம் இருக்கிறது.

அஜித்தும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம். அதற்கு வாய்ப்புகள் உள்ளன. அஜித் தரப்புக்குள் ஒரு விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. அவரும் வரலாம் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

ரஜினிக்கு மிகப்பெரிய புகழ் இருக்கும்போது 'நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை' என்று பேசினார் கமல். கடைசியில் என்ன நடந்தது? ரஜினி அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கமல் அரசியலுக்கு வந்துவிட்டார்.

 Ravindran Duraisamy comments about Vijay party

ஜெயலலிதா மறைந்தபோது அந்த இடத்தை அஜித்தை வைத்து நிரப்பலாம் என ஓர் பேச்சு எழுந்தது. அதை சசிகலா குடும்பம் உடைத்துவிட்டது. இன்று அஜித் பிறந்தநாளுக்கு ஒ பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்கிறார்.

அஜித், ஒரு சினிமா விழாவில் கட்டாயப்படுத்தி எங்களை அழைத்து வருகிறார்கள் என்று மு.கருணாநிதியிடம் நேருக்கு நேராகக் கோபத்தை வெளிப்படுத்தினார். அன்று முதல் ஜெயலலிதாவின் அன்புக்கு உரியவர் ஆனார். அவருக்கு அதிமுக வட்டாரத்தில் நல்ல பெயர் உள்ளது. எனவே அவர் வருங்காலத்தில் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்.

2024இல் விஜய் போட்டியிடாதது அவருக்குப் பலவீனம் தான். மதவாதத்தை எதிர்ப்பேன் என்கிறார். ஜெயலலிதா 'தலைவா' படத்திற்குப் பிரச்சினை செய்தபோது விஜய் என்ன செய்தார். மோடியைச் சந்திக்கக் கோயம்புத்தூர் போய் கை கட்டிக் காத்துக்கொண்டிருந்தார்.

அன்று விஜய்க்கு மதவாதம் தெரியவில்லையா? உண்மையில் மதவாதத்தை எதிர்ப்பவராக விஜய் இருந்திருந்தால் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் இல்லையா?

 Ravindran Duraisamy comments about Vijay party

விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த போது அவர்களின் வருகை அதிமுகவைத்தான் பாதித்து உள்ளது. அதைப்போன்று விஜய்யின் வருகையால் யாருக்குப் பாதிப்பு வரும் என்பதை 2024 தேர்தல் முடிவுகளுக்கு பின்புதான் சொல்ல முடியும்.

விஜய் 2024 வந்திருந்தால் அதிமுக எடப்பாடிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அவர் வரவில்லை. ஆகவே விஜய் வருகை யாரைப் பாதிக்கும் என்பது 2024 தேர்தல் முடிவுக்குப் பின்பே சொல்ல முடியும்.

விஜயகாந்த்தும் கமலும் அதிமுகவைப் பலவீனப்படுத்தினார்கள் என்பதால் விஜய் வருகையும் அதிமுகவையே பலவீனப்படுத்தும் எனச் சொல்ல முடியாது. ஆகவேதான் தேர்தல் முடிவுக்குப் பின்பே கணிக்க முடியும் என்கிறேன்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்குப் பின் ஒரு வெற்றிடம் அரசியலிலிருந்தது. இன்று அந்த வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் கருணாநிதியைவிட மேலே சென்றுவிட்டார்.

கருணாநிதி ஒரு காலத்தில் ராமதாஸை எதிர்க்க முடியாமல் அவரது ஆதிக்கத்திற்குப் பணிந்துவிட்டார். அப்படிச் செய்து திமுக தனி பெரும்பான்மை வரவில்லை. ஆனால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்ப திருமாவளவனை தன் பக்கம் வைத்து ராமதாஸை வென்று விட்டார். கட்சியைப் பெரும்பான்மை பலத்துக்குக் கொண்டுவந்து விட்டார்.

மு.கருணாநிதியால் பெறமுடியாத அளவுக்கு 20 எம்.பி சீட்டுகளை வென்று காட்டி விட்டார். இன்றைய தமிழக அரசியல் களம் ஸ்டாலின் Vs மற்றவர்கள் என்றுதான் உள்ளது. விஜய் 2024 வந்திருந்தாலும் இதே நிலைதான் நீடித்திருக்கும். திமுக கூட்டணி 54% வாக்குகளைப் பெற்றிருந்தது.

மீண்டும் இந்த அணி வெல்வதற்காகச் சூழல்தான் நிலவுகிறது. அப்படி வென்றால் மீண்டும் ஸ்டாலின் Vs மற்றவர்கள் என்ற நிலையே 2026 இல் கூட தொடரும்.

2026 விஜய் Vs உதயநிதி Vs அண்ணாமலை என்றுதான் களம் அமையும் என்று சிலர் சொல்கிறார்கள். அரசியலே தெரியாத அம்மாஞ்சிகள் பேச்சுக்கள் இவை" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+