அண்ணி திரிஷா என்று மீண்டும் ஆரம்பித்த ஆர்பி உதயகுமார்.. அப்ப சண்டை காவிரி தண்ணீருக்கு இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நதிநீர் உரிமையைப் பெற ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் குரல் கொடுக்காத சூழலில், நடிகை திரிஷா தொடர்பான விவகாரத்துக்காகவே 2 கட்சிகளும் சண்டையிட்டுக் கொள்வதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் பருவமழை பொய்த்து, அணைகளின் நீர்மட்டம் குறைந்து, அரிசி விலையும் உயர்ந்து வரும் நிலையிலும் தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு நீர் திறக்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய நீரைக் கேட்டு அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

RB Udhayakumar Trisha Cauvery Water AIADMK

காவிரி நதிநீர் விவகாரம்

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதிநீர் விவகாரத்தில், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் நடிகை திரிஷா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஏன் இன்னும் தங்களது ஆதரவுக் குரலை பதிவு செய்யவில்லை என்று அதிமுக தரப்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் மாநிலத்தின் நதிநீர் உரிமைகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, சமூகத்தில் செல்வாக்கு மிக்க பிரபலங்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார் வீடியோ

மூத்த தலைவர் ஆர்பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் பேசியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ளது. தமிழக நீர்வளத் துறையின் கீழ் பாலாறு, காவிரி, பரப்பிகுளம், வைகை, தாமிரபரணி, நம்பியாறு, என 90 அணைகளின் கீழ் 14,141 பாசன ஏரிகளும் உள்ளாட்சியை நிர்வாகத்தின்கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் என இகைள் மூலம்தான் உள்ளூர் வேளாண் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றன.

தென்மேற்கு பருவமழை இயல்பான மழை அளவான 126.8 மில்லி மீட்டரைவிட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது.

ஒரு கிலோ அரிசி விலை

தற்போது அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.. கடந்த 30 நாட்களில் ஒரு மூட்டை அரிசி விலை ரூ.300 முதல் ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.. ஒரு கிலோ ரூ.50க்கு விற்ற அரிசி, இப்போது ரூ.6க்கு விற்கிறது. இந்நிலையில்தான் யார் என்ன பேசினாலும், எதை பேசினாலும், எப்படி பேசினாலும், எவ்வளவு பேசினாலும், என்ன நடந்தாலும், நம்ம முதல்வருக்கு கோபமே வராது. ஆனால், குலவிளக்கான பெண்களை இழிவுபடுத்தி மட்டும் யாராவது தமிழ்நாட்டில் மூச்சுவிட்டாலே அவ்வளவுததான்.

தமிழ்நாடு பற்றி எரிந்தாலும் சரி, ரத்தம் சொட்ட சொட்ட போராட்டம் நடந்தாலும் சரி, தமிழ்நாடே போராட்டக்களமாக மாறினாலும் சரி, நாடாளுமன்றத்திலே போராட்டம் நடத்தினாலும் சரி, நம்ம சிஎம் சார் போட்ட உத்தரவால் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

காவிரி தண்ணீர்

மொத்தத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும், காவிரி தண்ணீருக்காக சண்டை போடுறாங்க என்று எதிர்பார்த்தால், திரிஷா அண்ணிக்காக சண்டை போடுறாங்க என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்புகூட திரிஷா குறித்து ஆர்பி உதயகுமார் விமர்சித்திருந்தார்.. "தனக்கு நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற திரைப்பட நடிகை மேடம் திரிஷாவைக் கூட துணை முதல்வராக்க விரைவிலேயே அறிவிப்பு வெளிவரலாம். ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம்.

நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக எல்லோருக்கும் அரசு பதவி வழங்கும் முதல்வர் விஜய், எப்போது வேண்டுமானாலும் மேடம் திரிஷாவை துணை முதல்வராக அறிவிக்கலாம் என்ற அதிர்ச்சியில்தான் தமிழகம் உறைந்து போயிருக்கிறது." என்று ஆர்பி உதயகுமார் அன்று விமர்சித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் திரிஷா குறித்து பேசியிருப்பது சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+