Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி நீங்க டெபாசிட் செய்த தொகைக்கு வரும் வட்டி குறையும்..வங்கிகள் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், இதனால் நாம் செலுத்தும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் நாம் வங்கியில் செய்யப்போகும் டெபாசிட்களுக்கான வட்டியும் குறையும் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா! இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளதால் நாம் கடன்களுக்குக் கட்டும் வட்டித் தொகை மட்டும் குறையாது. மாறாக நீங்கள் வங்கிகளில் போடும் சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற தொகைகளுக்கான வட்டியும் கூட குறையும். இப்போது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் தங்களின் சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியைக் குறைத்துள்ளது.

bank personal finance

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏப்ரல் 15ம் தேதி முதல் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ₹3 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகைகளுக்குப் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.80% வட்டி வழங்கப்பட்ட நிலையில், இப்போது அது 6.70%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வட்டி 7%ல் இருந்து 6.90%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ அதன் "SBI We-Care" திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50% வட்டியை வழங்குவது குறிக்கப்படத்தக்கது. அதாவது மூத்த குடிமக்களுக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.30% வட்டி வழங்கப்பட்ட நிலையில், இப்போது அது 7.20%ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வட்டி 7.5%ல் இருந்து 7.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா அதன் வட்டி விகிதங்களை 0.25% வரை குறைத்துள்ளது. முன்பு 91 முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பாங்க் ஆப் இந்தியா 4.50% வட்டி வழங்கியது. அது இப்போது 4.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 180 நாட்கள் முதல் ஓராண்டு வரையிலான காலகட்டத்திற்கு வட்டி 6%ல் இருந்து 5.75%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 2 ஆண்டுகள் வரையலான காலத்திற்கு 6.8%ல் இருந்து 6.75%ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் 7.30% வழங்கிய அதன் 400 நாள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை பேங்க் ஆஃப் இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது.

ஹெச்டிஎஃப்சி

ஹெச்டிஎஃப்சி வங்கியும் அது வழங்கும் வட்டியைக் குறைத்துள்ளது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரையிலான காலகட்டத்திற்கு பிக்சட் டெபாசிட்டிற்கு வழங்கப்படும் வட்டியை 0.35% ஹெச்டிஎஃப்சி குறைத்துள்ளது. 4 ஆண்டுகள் 7 மாதத் திட்டத்திற்கான வட்டியை 0.40% வரை ஹெச்டிஎஃப்சி குறைத்துள்ளது.

சேமிப்பு கணக்குக்கான வட்டியையும் ஹெச்டிஎஃப்சி வங்கி குறைத்துள்ளது. 50 லட்சத்திற்குக் குறைவாக உள்ள சேமிப்புகளுக்கு முன்பு 3% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது 2.75%ஆகக் குறைக்கப்படுகிறது. அதேபோல ரூ.50 லட்சத்திற்கு மேலான தொகைக்கு 3.5% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 3.25%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

bank personal finance

இதர வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் அதன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது அதன் திட்டங்களுக்கு 3.50% முதல் 7.10% வரை மட்டுமே வட்டி விகிதங்களை வழங்குகிறது. கனரா வங்கி சில பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்ட விகிதங்களை 0.20% வரை குறைத்துள்ளன.

இந்த வட்டி குறைப்பு என்பது ஏற்கனவே டெபாசிட் செய்திருக்கும் பிக்சிடு டெபாசிட் உள்ளிட்ட தொகைக்கு பொருந்தாது. புதிதாக டெபாசிட் செய்யும் தொகைக்கு மட்டுமே வட்டி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ரெப்போ வட்டி விகிதம் காரணமாக நாம் வங்கிக்குக் கட்டும் வட்டி விகிதமும் குறைக்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கியில் முன்பு 8.5% வட்டியை நாம் செலுத்த வேண்டி இருந்த நிலையில், இப்போது அது 8.25%ஆகக் குறைந்துள்ளது. இது மக்களுக்கு ஒரு வகையில் நல்ல செய்திதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+