வங்கி கணக்கில் பணம்.. தப்பித்தவறி இந்த தப்பை பண்ணிடாதீங்க! வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்காக யாராவது உங்களுக்கு சுலபமாக பணம் தருவதாகச் சொல்கிறார்களா? சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றுபவர்களாக (money mule) இருக்காதீர்கள். பணம் பரிமாற்றுபவர் (money mule) சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை ஒருவர் சார்பாக மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்பவர் ஆவார் . எனவே, உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கையில் பணம் இருந்தால்தான் ஆபத்து. வங்கியில் வைத்து இருந்தால் பாதுகாப்பாக வைத்து இருக்கலாம் என்று கருதிய காலம் எல்லாம் தற்போது மலையேறிவிட்டது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூட கொஞ்சம் அசந்தாலும் மோசடி செய்து மொத்தமாக சுருட்ட சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் தனி நெட்வொர்க் அமைத்து இயங்குகின்றன.

RBI

சைபர் கிரைம் மோசடி

அதிலும் புதுப்புது யுக்தியை கையாண்டு மோசடிகள் அரங்கேறுவதை பார்க்க முடிகிறது. சமீப காலமாக வங்கி கணக்கை உள் வாடகைக்கு விடுவது போல, மற்றவர்களை கையாள அனுமதி கொடுத்து, அதில் கமிஷன் தொகை பெறலாம் என்று நூதன வகையில் மோசடி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் இப்படி மூன்றாம் தரப்பினரின் வங்கி கணக்கை பயன்படுத்தி, பணம் கிடைக்கும் என ஆசை காட்டி அப்பாவிகளை சிக்க வைத்துவிடும் மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு

இந்நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. ரிசர்வ் வங்கி அதில் கூறியிருப்பதாவது:- உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்காக யாராவது உங்களுக்கு சுலபமாக பணம் தருவதாகச் சொல்கிறார்களா? சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றுபவர்களாக (money mule) இருக்காதீர்கள். பணம் பரிமாற்றுபவர் (money mule) சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை ஒருவர் சார்பாக மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்பவர் ஆவார்.

உங்கள் வங்கிக் கணக்கு, உங்கள் பணம், பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிப்பது உங்களைச் சிறைக்கு அனுப்பக்கூடும். உங்கள் வங்கி விவரங்கள், OTP அல்லது கடவுச்சொற்களை எப்போதும் யாருடனும் பகிராதீர்கள். உங்கள் கணக்கைப் பாதுகாத்திடுங்கள். உங்களைப் பாதுகாத்திடுங்கள். சுலபமாக பணம் சம்பாதிப்பது ஆபத்தில் முடியலாம்' என்று தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கானோர் கைது

சைபர் குற்றவாளிகள் நூதன முறையில் கொள்ளையடிக்கும் பணத்தை வங்கிகள் மூலமாக பரிமாற்றம் செய்கிறார்கள். ஆனால் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, மோசடி பணத்தை மற்றவர்களின் வங்கி கணக்கில் போட வைத்து, பின்னர் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நெட்வொர்க் வைத்து ஏஜெண்டுகளை நியமனம் செய்து அவர்களின் வங்கி கணக்குகளில் பணத்தை போட வைக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் மூலம் பணத்தை பங்கு போடுவது போலீஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இதற்காக கமிஷன் அடிப்படையில் ஏஜெண்டுகள் செயல்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+