தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா? மாலை இறுதி முடிவு என தகவல்
சென்னை: தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் ஒருசில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது தொடர்பான புகார் மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளை சேர்ந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து கோரிக்கை எழுந்துள்ள வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவு நடத்தலாமா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்து அறிக்கை தர பணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சிறிய அளவிலான வன்முறை, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி, கள்ள ஓட்டுக்கள் போட முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை காரணமாக கூறி குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரியுள்ளதாக குறிப்பிட்டார். எனவே இன்று மாலைக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க உள்ளனர்.
அவர்களின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகு தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய முடிவு மாலைக்குள் அறிவிக்கப்படும் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications