குட்டீஸ்களா ஓரம் கட்டுங்க.. பெரியவங்கெல்லாம் வாங்க.. WFH அனுபவங்களை சொல்லுங்க.. ஓடியாங்க!
சென்னை: கொரோனாவைரஸால் வீடுகளே அலுவலகங்கள்..அலுவலகங்களே வீடுகள் என்றாகி விட்டது.
21 நாள் லாக் டவுன் பீரியட் முடியப் போகிறது. ஆனால் அதன் பிறகும் அது தொடரும் என்றே தெரிகிறது. காரணம், நீடித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. இன்னும் வைரஸின் கொட்டம் அடங்காமல் தொடர்வதால்தான் இந்த சூழல். எனவே நாமும் மனதளவில் அதற்கேற்ப தயாராக ஆரம்பிப்போம்.. நமது நல்லதுக்குத்தான இதெல்லாம்.

காலம் காலமாக "நான் ஆபீஸுக்குப் போய்ட்டு வரேன்ம்மா/ப்பா/ங்க/டார்லிங்" என்று வீடுகள் தோறும் முழங்கிக் கொண்டிருந்த குரல்கள் இன்று ஓய்ந்து போய் விட்டன. அந்தக் காலை நேர hurry burry அதாங்க அந்த பதட்டம் பரபரப்பும் காணாமல் போய் விட்டது. ஒரு முழு நாள் பரபரப்பை அந்த காலை நேரத்தில் தலையில் கொட்டிக் கொண்டு கொதிக்க கொதிக்க ஓடினோமே.. அந்த அவஸ்தை இப்போது இல்லை. எல்லோருமே வீட்டில் இருக்கிறோம். எல்லோமே நிதானமாகி விட்டது.
கிட்டத்தட்ட 20 நாட்களாகி விட்டது இந்த ஒர்க் பிரம் ஹோம் வேலைக்கு தனியார் நிறுவனத்தினர் மாறி. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கலாச்சாரம் பலருக்கு புதிதாக இருக்கலாம். புதிய அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். சிலருக்கு அது கஷ்டமாகவும் இருக்கலாம். பலருக்கு ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கலாம். எல்லாம் கலந்த கலவையாகவே இந்த ஒர்க் பிரம் ஹோம் காணப்படுகிறது.
வீட்டிலிருந்தே வேலை என்று சொல்வது எளிதாக இருக்கும்.. ஆனால் அதை அனுபவித்து வருபவர்களுக்குத்தான் அதன் நிஜமான கஷ்டங்கள் புரியும்.. அலுவலகங்களில் கிடைக்கும் அனைத்து வசதியும் வீட்டில் கிடைக்காது. இப்படி எல்லாவற்றையும் தாண்டித்தான் வேலை பார்த்தாக வேண்டும். அத்தோடு தற்போது வீட்டில் மொத்தக் குடும்பத்தினரும் கூடவே இருப்பதால் டிஸ்டிராக்ஷன் இல்லாமல் வேலை பார்த்தாக வேண்டிய சிக்கலும் உண்டு.
இப்படி பலவிதமான கலவையான அனுபவங்களோடு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நமது வாசர்களுக்காகவே இந்த மடல்.. உங்களது அனுபவங்களைச் சொல்லுங்கள்.. கஷ்டமோ நஷ்டமோ ஜாலியோ எதுவாக இருந்தாலும் எங்க காதுல போடுங்க.. நாங்க எல்லோருக்கும் அதை பகிர்ந்து அனைவரிடமும் உங்களது உணர்வுகளைக் கொண்டு செல்கிறோம்.
சமீபத்தில்தான் குட்டீஸ்களின் அனுபவங்களைக் கேட்டிருந்தோம். கலக்கி விட்டனர் செல்லங்கள்.. வந்து குவிந்த அவர்களின் அனுபவங்கள் எல்லாம் மெய் சிலிர்க்க வைத்து விட்டன. இப்போது பெரியவர்களுக்கான டர்ன் (அவங்களும் ஆசைப்படுவாங்கல்ல).
ஸோ, எடுங்க லேப்டாப்பை.. எழுதி அனுப்புங்க மெயிலை.. தமிழிலேயே எழுதலாம்.. ஆங்கிலத்திலும் எழுதலாம்.. எழுத்தோடு புகைப்படம், சிறிய அளவிலான வீடியோ என எப்படி வேண்டுமானாலும் அனுப்பலாம்.. காத்திருக்கிறோம். கொரோனா கால கஷ்டங்களையும், டென்ஷனையும் சற்றே மறக்கலாம்.. கூடவே ஜாக்கிரதையாகவும் இருப்போம்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications