Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதிவுக்கட்டணம் மாறுதா.. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வந்த அதிரடி.. உடனே கிளம்பிய ரியல் எஸ்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரியல் எஸ்டேட் துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் என்றும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம் என்றும் அறிவித்து உடனடியாக குறைத்து நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கட்டிடம், பிரிக்கப்படாத பாகம் சேர்த்து மொத்த மதிப்புக்கு பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. அத்துடன், முத்திரை தீர்வையை கட்டிடத்தின் மதிப்பை பொறுத்து அதிகபட்சமாக 3 சதவீதம் வரை தமிழக அரசு குறைத்துள்ளது. இதனை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன், முக்கிய கோரிக்கை ஒன்றையும் அரசுக்கு விடுத்துள்ளது.

Real Estate and FAIRA letter to TN Government about Apartment deed registration reduction in stamp duty

புதிய கோரிக்கை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் உள்ளதாவது:

"தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் கடந்த 27.07.2023 அன்று மாநிலம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற "பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில்" FAIRA சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிலவற்றில் பகுதி தீர்வினை ஏற்படுத்தி, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் பிரிபடாத பாக சொத்து மதிப்பிற்கு ஒரு ஆவணமும், கட்டிடத்திற்கென தனியாக ஒரு ஒப்பந்த ஆவணமும் ஆக இரு ஆவணங்களாக இதுவரை பதிவு செய்து வந்த நடைமுறையை மாற்றியமைத்து,

குடியிருப்புகள்: எதிர்வரும் 01.12.2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தற்போது மனை மற்றும் கட்டிடத்துடன் கூடிய மதிப்பிற்கு ஒரே ஆவணமாக பதிவு செய்யும் வகையில், முதலில் பதிவு செய்யப்படும் 50 லட்சம் மதிப்புக்குள் உள்ள பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் 4% சதவிகிதம் முத்திரை தீர்வை மற்றும் 2% சதவிகிதம் பதிவு கட்டணம் உட்பட 6% சதவிகிதம் எனவும்,

அதேபோன்று 50 லட்சத்துக்கும் மேல் 3 கோடி மதிப்புக்குள் உள்ள முதலில் பதிவு செய்யப்படும் பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் முத்திரை தீர்வை 5% சதவிகிதம் மற்றும் பதிவு கட்டணம் 2% சதவிகிதம் உட்பட 7% சதவிகிதம் எனவும், அறிவித்து செய்தி வெளியீடு எண். 2332/2023 ஆக அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ள தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவு துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் மேற்கண்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டுனர்களால் அபிவிருத்தி செய்யபட்டு முதலில் பதிவு செய்யப்படும் மனைப்பிரிவு மற்றும் தனி வீடு குடியிருப்பு திட்டங்களுக்கும், மேற்கண்ட வகையில் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் பொருந்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும், மேலும் 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரிபடாத பாகம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என்ன முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் என்கிற தெளிவுரையை வழங்கிட வேண்டுமெனவும்,

கோரிக்கை: ரியல் எஸ்டேட் துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் எனவும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம் எனவும் அறிவித்து உடனடியாக குறைத்து நடைமுறைப்படுத்திட வேண்டும்" என்று பெயிரா தலைவர் ஹென்றி அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+