மனை, கட்டுமான பிரிவுகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைப்பு - கட்டணம்.. தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி
சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டண உயர்வு குறித்த சலசலப்புகள் அடங்குவதற்குள்ளாகவே, அடுத்த அதிரடி வெளியாகியிருக்கிறது.. கட்டுமான திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் குறித்த அறிவிப்பை தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

திடீர் உயர்வு: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் வீடுகளின் விலையும் உயரும் என கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், கட்டுமான திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பில் உள்ளதாவது:
கட்டுமான பிரிவு: மனைப்பிரிவு, கட்டுமான இடத்துக்கான அனுமதிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.5 பதிவுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் 60 சதுரமீட்டருக்குள் இருந்தால், தளப்பரப்பு குறியீடு அளவுக்கு ஒருசதுரமீட்டருக்கு ரூ.10-ம், 60 சதுரமீட்டருக்கு மேல் கட்டப்பட்டால் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.20-ம் செலுத்த வேண்டும்.
வர்த்தகக் கட்டிடங்களைப் பொறுத்தவரை, தளப்பரப்பு குறியீடு அளவில் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.60-ம், இதர கட்டிடங்களுக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.25-ம் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். பல்வேறு துறைகளிடம் இருந்து பணி முடிப்பு சான்றிதழ் பெறுவதற்கான தடையில்லா சான்று பெற ஒவ்வொரு கோரிக்கைக்கும் தலா ரூ..2 ஆயிரம், மனைப்பிரிவை பத்திரப்பதிவு செய்வதற்கு தடையில்லா சான்று பெற ஒவ்வொரு மனைக்கும் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மனைப்பிரிவு திட்டம்: கட்டுமானம், மனைப்பிரிவு திட்டத்தைப் பதிவு செய்தபின், திட்டத்தின் பெயர் மாற்றம், வங்கி மற்றம், நிறுவன பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5 ஆயிரம், திட்டச்சான்று உண்மை நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.2 ஆயிரம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட்ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ்பெற ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம், செயல்பாட்டுக்கான மனுவுக்கு ரூ.1,600 செலுத்த வேண்டும்.
முகவர் பதிவு காலாவதியாகும் நாளுக்கு ஒருமாதம் முன்னர் பதிவை புதுப்பிக்க தனி நபர் ரூ.5 ஆயிரமும், மற்றவர்கள் ரூ.50ஆயிரமும் செலுத்த வேண்டும். காலாவதியான பின் புதுப்பிக்க, தனி நபர் என்றால் புதுப்பித்தல் கட்டணம் மற்றும் தாமதக்கட்டணம் சேர்த்து ரூ.5,500-ம், மற்றவர்கள் ரூ.55 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
பதிவு நீட்டிப்பு: பதிவு நீட்டிப்புக்கு, முதல் நீட்டிப்புக்கு பதிவுக்கட்டணத்தில் 10 சதவீதம், 2-வது நீட்டிப்புக்கு 20 சதவீதம், 3-வது நீட்டிப்புக்கு 30 சதவீதம், 4-வது நீட்டிப்புக்கு 40 சதவீதம், 5-வது நீட்டிப்புக்கு 50 சதவீதம் என ஒவ்வொரு நீட்டிப்புக்கும் 10 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பதிவு காலாவதியாகும் நாளில் இருந்து 3 மாதம் முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதலாக 10 சதவீதம் தொகை வசூலிக்கப்படும். இந்த கட்டண மாற்றம் கடந்த மாதம்15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது" என்று கட்டண உயர்வு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு ஹைலைட்ஸ்:
"புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கம், மனைப்பிரிவில் உட்பிரிவுகள் உருவாக்கம் ஆகியவற்றுக்கு, 10.7 சதுர அடிக்கு, 5 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை
- குடியிருப்பு கட்டடங்கள், 645 சதுர அடி வரையிலான திட்டங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 10 ரூபாயாகவும்; 645 சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 20 ரூபாயாகவும் இருந்த பதிவு கட்டணம், 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- வணிக கட்டடங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 50 ரூபாயாக இருந்த கட்டணம், 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- பிறவகை கட்டடங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு 25 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை
- கட்டட பணி நிறைவு சான்று பெறும் நிலையில், தடையின்மை சான்று பெறுவதற்கு முன் தனியாக கட்டணம் விதிக்கப்படவில்லை. தற்போது ஒரு விண்ணப்பத்துக்கு, 2,000 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது
- மனை வாங்குவோர் தனியாக விண்ணப்பித்தால், ஒரு மனைக்கு தடையின்மை சான்று வழங்க, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- பதிவுக்கு பின் கட்டுமான திட்டத்தின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மாற்றுவதற்கு, ஒவ்வொரு மாற்றத்துக்கும், 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த அசல் ஆவணங்களின் பிரதி பெற, புதிதாக 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெற, இதற்கு முன் தனியாக கட்டணம் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த, தனியாக ஆணை கோரி மனு செய்ய, 1,600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ரியல் எஸ்டேட் முகவர்களாக பதிவு செய்ய, தனிநபர்களுக்கு, 25,000 ரூபாயும்; நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாயும் கட்டணம் உள்ளது. இதில் புதுப்பிக்க, தனிநபர்களுக்கு, 5,000 ரூபாய், நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- முகவர்கள் புதுப்பித்தலுக்கு காலதாமதமாக விண்ணப்பித்தால், தனிநபர்கள், 500 ரூபாய், நிறுவனங்கள், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்
- ஒரு கட்டுமான திட்டத்தை பதிவு செய்த நிறுவனம், அதை திரும்பப் பெற விண்ணப்பித்தால், பதிவு கட்டணத்தில், 10 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும்
- ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்த திட்டத்தில், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியாததால், கால அவகாச நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பதிவு கட்டணத்தில், 10 முதல் 50 சதவீதம் வரையிலான தொகை வசூலிக்கப்படும்" என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது.
பதிவு காலாவதியாகும் நாளி்லிருந்து 3 மாதம் முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூடுதலாக 10 சதவீதம் தொகை வசூலிக்கப்படும். இந்த கட்டண மாற்றம் கடந்த மாதம்15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பிரத்யேகமாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications