ரியல் எஸ்டேட் அதிரடி.. அடுக்குமாடி குடியிருப்புகளில்.. தமிழக அரசு கையிலெடுத்த "கார்பெட் ஏரியா"
சென்னை: வீடுகளின் சுவர்களுக்கு இடைப்பட்ட பரப்பளவு விபரங்களை குறிப்பிடும் வகையில் விதிகளை திருத்துவதற்காக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. என்ன காரணம்?
வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

வீடு மனை: அதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது.
2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
சொத்துக்கள்: அதேபோல, வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
எனவே, "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது.. அந்த அளவுக்கு ரெராவின் முக்கியத்துவங்கள், ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிகம்.
ரியல் எஸ்டேட்: இந்நிலையில், வீடுகளின் சுவர்களுக்கு இடைப்பட்ட பரப்பளவு விபரங்களை குறிப்பிடும் வகையில், விதிகளை திருத்துவதற்காக ரெரா பரிந்துரைத்துள்ளது.. அதாவது, ரியல் எஸ்டேட் சட்டப்படி, வீடுகளில், "கார்பெட் ஏரியா" எனப்படும் சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவுக்கு மட்டுமே விலையை நிர்ணயித்து, விற்பனை செய்ய வேண்டும்...
குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்யும்போது, வீடுகளின் கார்பெட் ஏரியா விபரங்கள் தனி அறிக்கையாகவும் பெறப்படுகின்றன. ஆனால், ஆணைய இணையதளத்தில், கார்பெட் ஏரியா விபரங்கள் இருக்குமே தவிர, கட்டுமான திட்ட அனுமதி வரைபடம், கடிதங்களில் இந்த விபரங்கள் இருப்பதில்லை. இதன்காரணமாக, குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் சிக்கல்களும் எழுகின்றன..
பரிந்துரை: இதற்குதான், "ரெரா" முக்கிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் கே.ஞானதேசிகன், டிடிசிபி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், "ரியல் எஸ்டேட் சட்டப்படி, கார்பெட் ஏரியா அடிப்படையில் தான் வீடுகள் விற்பனை இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் போது, வீடுகளின் கார்பெட் ஏரியா விபரங்களை தனியாக வெளியிடுகிறோம். கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைய தளத்தில் வெளியிடும் நிலையில், அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறோம்.
இணையதளம்: இதற்கு திட்ட அனுமதி வரைபடம் மற்றும் ஆணையில், ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பிளாக், எத்தனை தளங்கள், எத்தனை வீடுகள் என்பதுடன், வீடுகளின் கார்பெட் ஏரியா என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கு ஏற்ப, விதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். அத்துடன் தடையின்மை சான்று விபரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டால், விபரங்களை அறிய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications