நிலம், சொத்துக்களை வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி! தமிழக அரசின் STAR 3.0 ஆன்லைன் சேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17 முதல் மனை மற்றும் வீடுகளின் முதல் விற்பனைப் பதிவு முற்றிலும் இணையதளம் வழியாக மட்டுமே (STAR 3.0) நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் அவதிப்படுவதை தவிர்க்க, தேவையான கணினி சாதனங்களை வாங்கி, ஆன்லைன் பயிற்சியைப் பெற்று இப்போதே தயாராகுமாறு பெயிரா அமைப்பின் சார்பாக டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை நிறைவேறினால், அதனால் ஏற்படும் வசதிகள், நன்மைகள் என்னென்ன தெரியுமா?

டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பதிவுத்துறையின் 'STAR 3.0 - Anywhere Registration' திட்டத்தின் முதல் கட்டமாக, வரும் 17.08.2026 முதல் பிளாட் மற்றும் ஃபிலாட்களின் முதல் விற்பனை மற்றும் பத்திர வைப்பு ஆவணங்கள் (First Sale of Plot/Flat + Consecutive Deposit of Title Deed) 'Presenceless Registration' முறையில் இணையதளம் வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காகச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யும் பழைய நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

STAR 3 0 Registration Sub-Registrar Office Dr Henry STAR 3 0

இந்த புதிய நடைமுறை குறித்து ஃபைரா அமைப்பின் சார்பாக டாக்டர் ஆ.ஹென்றி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் நேரடியாகக் கூறியிருப்பதாவது:

பதிவுத்துறையின் புதிய STAR 3.0

"தமிழ்நாடு பதிவுத்துறை அறிவித்துள்ள இந்த புதிய STAR 3.0 நடைமுறையை அனைவரும் முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். 17 ஆகஸ்ட் வருவதற்கு முன்பே தயார் நிலைக்கு வந்துவிடுங்கள். பில்டர்கள், புரமோட்டர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் உங்கள் அலுவலகங்களிலேயே இதற்கான வசதிகளை உடனே ஏற்படுத்துங்கள். தேவையான கணினி, அதிவேக இணைய வசதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயோமெட்ரிக், டிஜிட்டல் ஃபிங்கர்பிரின்ட், டிஜிட்டல் போட்டோ போன்ற உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருங்கள்.

ஆன்லைன் பயிற்சிகள்

உங்கள் அலுவலகத்திலேயே இந்த புதிய முறைக்கான நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தற்போது பதிவுத்துறை சார்பில் நடைபெற்று வரும் சோதனை ஓட்டத்தை (Pilot / Trial) தவறாமல் பயன்படுத்தி ஆன்லைனில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு கட்டத்தையும் முன்கூட்டியே அறிந்து அனுபவம் பெறுங்கள். பணி நேரத்தில் தேவையற்ற தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உங்கள் பணியாளர்களுக்கும் இப்போதே உரிய பயிற்சி அளியுங்கள்.

பதிவுத்துறை சார்பில் மாவட்டந்தோறும் நடைபெறும் நேரடி பயிற்சிகளிலும், தலைமை அலுவலகம் சார்பில் நடைபெறும் ஆன்லைன் பயிற்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

புதிய முறையின் தொழில்நுட்ப நுணுக்கங்கள், நடைமுறைகள் மற்றும் செயல்முறை அனுபவத்தை இதன் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். 17.08.2026 முதல் இந்த கட்டாய நடைமுறை அமலுக்கு வருவதால், கடைசி நேரத்தில் உபகரணங்கள் வாங்குவது, மென்பொருள் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சி பெறுவது உங்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

"நாளை பார்த்துக்கொள்ளலாம்"

"நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்ற எண்ணம் வேண்டாம். எனவே இன்றே தயாராகுங்கள்; உபகரணங்களை தயார் செய்யுங்கள்.. முன்னோடித் திட்டத்தில் பயிற்சி பெறுங்கள்.. பயிற்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.. STAR 3.0-வை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. அதை சரியாக பயன்படுத்தும் திறனையும் நாம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பதிவுத்துறையின் இந்த முன்னோடி டிஜிட்டல் மாற்றம் விரைவான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் எளிமையான ஆவணப்பதிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 17.08.2026-ஐ எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம், அதற்கு முன்பே தயாராகுங்கள்." என்று டாக்டர் ஹென்றி தனது விழிப்புணர்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவசியமான விழிப்புணர்வு

டாக்டர் ஹென்றியின் இந்த விழிப்புணர்வு அழைப்பு மிகவும் அவசியமான, காலத்திற்கு ஏற்ற எச்சரிக்கையாகும்; ஏனெனில் ஆகஸ்ட் 17 அன்று புதிய கட்டாய நடைமுறை அமலுக்கு வரும்போது கடைசி நேரத்தில் பயோமெட்ரிக் சாதனங்கள் வாங்குவது, மென்பொருள் குழப்பங்கள் மற்றும் சர்வர் சிக்கல்களால் பத்திரப் பதிவுகளும் பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகளும் முடங்கிப் போவதைத் தவிர்க்க முடியும்.

அரசு அளிக்கும் பயிற்சிகளை இப்போதே பயன்படுத்திப் பணியாளர்களைத் தயார்படுத்துவதன் மூலம் தொழில்முறை தவறுகள் குறைக்கப்பட்டு பொதுமக்கள் எந்தவிதமான சிரமமுமின்றி விரைவாகவும், வெளிப்படையாகவும் சேவைகளைப் பெற முடியும் என்பதால், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்ற அலட்சியத்தை விட்டுவிட்டு இன்றே தயாராவதே ரியல் எஸ்டேட் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+