ரியல் எஸ்டேட் வரலாறு கருப்பு தினம்.. மனை இருந்தும் பத்திரம் முடியல.. 10 ஆண்டுகள் முன்பு நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016 செப்டம்பர் 9.. தமிழக ரியல் எஸ்டேட் துறையை அதிர வைத்த முக்கியமான நீதிமன்ற உத்தரவு வெளியான நாள். அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளின் விற்பனை, பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் முதல் மனை வணிகத்தை நம்பியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.
10 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த நாளை "ரியல் எஸ்டேட் கருப்பு தினம்" என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு இன்று நினைவுகூர்ந்துள்ளது.

2016 செப்டம்பர் 9-ம் தேதி. தமிழக ரியல் எஸ்டேட் துறையினர் மறக்க முடியாத நாள். அன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம், முறையான அரசு அனுமதி இல்லாமல் பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை விற்பனை செய்வதற்கும், அந்த மனைகளுக்கான பத்திரங்களை பதிவு செய்வதற்கும் தடை விதித்தது.

Real estate black day unapproved layout registration Tamil Nadu property registration 2016

ரியல் எஸ்டேட்

இதனால் ஏற்கனவே இதுபோன்ற மனைகளை வாங்கி வைத்திருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். மனை விற்பனை செய்து வந்தவர்களுக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஒரு சிறிய இடம் வாங்கி, அதில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பணம் சேமித்திருந்த சாதாரண மக்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டனர்.

அன்று ஏற்பட்ட பாதிப்பு ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. மனை வாங்கியவர்கள், மனை விற்பனை செய்தவர்கள் என பலரும் நீதிமன்றத்தை நாடினர். பின்னர், முறையான விதிமுறைகளை பின்பற்றி அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் கொண்டு வரப்பட்டன. இருந்தாலும், 2016 செப்டம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை ரியல் எஸ்டேட் துறையினர் இன்றும் நினைவுகூருகின்றனர்.

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள்

அந்தவகையில், பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பும், 2016 செப்டம்பர் 9-ம் தேதியை தமிழக ரியல் எஸ்டேட் வரலாற்றின் "கருப்பு தினம்" என நினைவுகூர்ந்துள்ளது.

லட்சக்கணக்கான சாமானிய மக்களின் சொந்த மனை, சொந்த வீடு, சொந்த முகவரி என்ற கனவுகளுக்கு வழிகாட்டிய மனை வணிகத் துறைக்கு அந்த நாள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பெயிரா நினைவஞ்சலியில் தெரிவித்துள்ளது.

பட்டா வீட்டு மனைகள்

பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டு மனைகளின் விற்பனை மற்றும் பதிவு தொடர்பாக கடுமையான தடைகள் உருவானதால், பல ஆண்டுகளாக சேமித்த பணத்தில் மனை வாங்கிய பொதுமக்களும், மனை வணிகத்தை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்பட்டதாகவும், பலருக்கு வழிகாட்டியவர்கள் வழி தெரியாமல் போனதாகவும், பலருக்கு முகவரி கொடுத்தவர்கள் தங்களுக்கே முகவரி தேடும் நிலை ஏற்பட்டு, 10 ஆண்டுகள் கடந்தாலும் அந்த வலி மற்றும் பாதிப்புகள் மறக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

யாரையும் குற்றம்சாட்டுவதற்காக இந்த நாளை நினைவுகூரவில்லை, சாமானிய மக்களின் சொந்த மனை, சொந்த வீடு கனவுகளுக்கும், ரியல் எஸ்டேட் துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கும் நியாயமான தீர்வும் தெளிவான நடைமுறையும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நாளை நினைவுகூருவதாகவும் பெயிரா தன்னுடைய நினைவஞ்சலியில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பெயிரா ஹென்றி நினைவஞ்சலி

இதோ, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அஞ்சலி வரிகள் இவைதான்:

"தமிழக ரியல் எஸ்டேட் வரலாற்றின் "கருப்பு தினம்"!
இந்த நாளை எப்படி மறக்க முடியும்?...

ஒரு காலத்தில் லட்சக்கணக்கான சாதாரண மக்களின் சொந்த மனை... சொந்த வீடு... சொந்த முகவரி... என்ற கனவுகளுக்கு வழிகாட்டிய மனை வணிகத் துறைக்கு, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள் அல்லவா இது?

அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டு மனைகள்
(பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்றிருந்தாலும்)
விற்பனை மற்றும் பதிவு தொடர்பாக கடுமையான தடைகள் உருவான நாள் அல்லவா?

தலைமுறை தலைமுறையாக சேமித்த பணத்தில், ஒரு சிறிய மனை வாங்கி சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற சாமானிய மக்களின் கனவுகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்ட நாள் அல்லவா?

ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்த மனை வணிகத் தொழில் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்த நாள் அல்லவா?

தங்கள் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையை கட்டியெழுப்பிய பலருக்கு வாழ்வாதாரப் போராட்டம் உருவான நாள் அல்லவா?

பலருக்கு வழிகாட்டியவர்கள் வழி தெரியாமல் போன நாள்...
பலருக்கு முகவரி கொடுத்தவர்கள் தங்களுக்கே முகவரி தேடும் நிலை ஏற்பட்ட நாள்...

எண்ணற்ற குடும்பங்களின் எதிர்காலத் திட்டங்கள் கேள்விக்குறியான நாள்...
இது ஒரு சாதாரண தேதி அல்ல...
இது ஒரு துறையின் வலியை நினைவூட்டும் தேதி!

- 09/09/2016
தமிழக ரியல் எஸ்டேட் வரலாற்றில் பதிந்த ஒரு ஆறாத வடு...
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
வலி மறையவில்லை...
நினைவுகள் நீங்கவில்லை...
பாதிப்புகள் மறக்கப்படவில்லை...
**ஆறாத வடுவுடன்...
நீங்காத நினைவுகளுடன்...
பத்தாம் ஆண்டில்...**
🖤 09/09/2016 - 09/09/2026 🖤

ரியல் எஸ்டேட் கருப்பு தினம்!
இந்நாளை நினைவுகூர்வது
யாரையும் குற்றம் சாட்டுவதற்காக அல்ல...

சாமானிய மக்களின் சொந்த மனை - சொந்த வீடு கனவுகளுக்கும்,
ரியல் எஸ்டேட் துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கும்,
நியாயமான தீர்வும் தெளிவான நடைமுறையும் கிடைக்க வேண்டும் என்ற
எங்கள் நீண்டகால எதிர்பார்ப்பை மீண்டும் பதிவு செய்வதற்காக!
🙏 நினைவில் கொள்வோம்...
நியாயமான மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்" என்று பெயிரா தலைவர் ஹென்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+