"சைலண்ட் மோட்" தங்க தமிழ்செல்வன்.. அமமுகவில் என்ன நடக்க போகிறது.. புயல் வருமா.. புஸ்ஸாகுமா
அமமுக ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் அமைதியுடன் காணப்பட்டாராம்
Recommended Video
சென்னை: நேத்து அமமுக கூட்டத்துல தங்க தமிழ்செல்வன் வாயே திறக்கலையாம்.. அப்படி ஒரு சைலன்ட்டாக இருந்துவிட்டு போய் இருக்கிறார்.. இந்த அமைதிதான் நிறைய யோசிக்க வைத்துள்ளது.
தேர்தல் ரிசல்ட் வந்ததில் இருந்தே அமமுக கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறது. டிடிவி தினகரன் மட்டும் பெங்களூர் சென்று வந்தார், செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், தோல்விக்கான விளக்கத்தை முடிந்தவரை சொல்லி வருகிறார்.
நேற்றுகூட அமமுகவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது தினகரனிடம் நிர்வாகிகளும், தோற்று போன வேட்பாளர்களும் புலம்பி தள்ளி இருக்கிறார்கள்.

புலம்பல்
"எங்களுக்கு யாரும் சரியா வேலை பார்க்கல.. கட்சி தந்த பணத்தை நிர்வாகிகள் செலவு பண்ணல. குக்கர் கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.. பரிசுபெட்டியை சீக்கிரமா மக்கள் கிட்ட கொண்டு போக முடியல. இனிமே நாம போட்டியிட்டா கூட்டணிதான் வெக்கணும், இப்படி தனியா நின்னு மாட்டிக்க கூடாது" என்று தனித்தனியாக புலம்பி உள்ளனர்.

வாயே திறக்கவில்லை
ஆனால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வாயே திறக்கவில்லையாம். தொகுதிகளில் ஏன் தோற்றோம் என்று பலர் விளக்கம் சொன்னபோதும், இவர் எதுவுமே சொல்லவில்லை. மற்றவர்கள் மீதும் புகார் தெரிவிக்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் அப்படி ஒரு அமைதியாக இருந்தாராம். உடனே செய்தியாளர் சந்திப்பு நடந்தது. வழக்கமாக தினகரன் கூடவே வந்து நிற்கும் தங்க தமிழ்செல்வன், அதை தவிர்த்துவிட்டு நடையை கட்டி இருக்கிறார்.

ஒருசிலர் போகலாம்
இதன்பின்னர்தான் செய்தியாளர்களிடம் தினகரன் எட்டு வழி சாலை எதிர்ப்பு குறித்தெல்லாம் பேசியபோது, "கட்சியில் இருந்து ஒருசிலர் போகலாம். ஆனா அதை பெரிசா எடுத்துகொள்ளமாட்டேன். எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று இல்லை. யாரையும் கட்டுப்படுத்தி கட்சியில் இருக்க சொல்லவும் இல்லை" என்றார்.

மவுனம் ஏன்?
இப்படி தினகரன் யாரை பற்றி சொல்ல வருகிறார்? தங்க தமிழ்செல்வனின் மவுனத்தின் காரணம் என்ன? இதெல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் எங்கேயோ இடிக்குதே!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications