Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் ஐயர்களாம்.. இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல பாஜக!

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு தமிழக பாஜக பாராட்டி வாழ்த்து கூறியுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு, தமிழக பாஜக வாழ்த்து சொல்லி உள்ளது.. திடீரென பாராட்டி வாழ்த்து சொல்ல என்ன காரணம்?
முன்னாள் முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் என்பவரிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கி இருந்தார். அப்போது சரபேஸ்வரரின் பேத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த வீட்டில் திருமணம் நடைபெற வேண்டும் என்று பேத்தியின் விருப்பத்தை கருணாநிதியிடம் சரபேஸ்வரர் சொல்லி உள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கருணாநிதி, இரண்டு மாதங்கள் அந்த வீட்டை அவர்களுக்கு கொடுத்து இருந்தார்.

சரோஜா

சரோஜா

மலரும் நினைவுகளுடன் கோபாலபுரம் வீட்டை காண வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சரோஜா சீதாராமன் குடும்பத்தினரை, கோபாலபுரம் இல்லத்திற்கு வரவழைத்து காலை உணவு அளித்து, வீட்டை சுற்றிக் காட்டினார். பிறகு, முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்..

 கோபாலபுரம்

கோபாலபுரம்

அந்த ட்வீட்டில், "வீடு என்பது பலரது கனவு. கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.

 கருணாநிதி

கருணாநிதி

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர். அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது" என்று பதிவிட்டிருந்தார்.

 ஹைலைட்

ஹைலைட்

இதற்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி வாழ்த்து சொல்லி உள்ளார். அதுவும் தன் பாணியிலேயே, வாழ்த்தியதுதான் இதில் ஹைலைட்.. 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அதில்,"சிறப்பு!!! வீட்டை விலைக்கு வாங்கிய பின்னும், வைதீக முறையிலே, தரையிலே உட்கார வைத்து, மணமக்களுக்கு பக்கத்திலே புரோகிதரை/அய்யரை உட்கார வைத்து நடந்த திருமணத்தில், மணமக்களுக்கு இடையிலே நெருப்பை மூட்டி, அந்த நெருப்பிலிருந்து புகை மண்டலம் கிளப்பி, அந்த புகை மணமக்களின் கண்களை தாக்கி கண்ணீர் சிந்தி, வந்திருந்தவர்கள் கண்களையும் விட்டு வைக்காமல், கண்களை கசக்கி கொண்டு, கிங்கரர்களை கூப்பிட்டு, முப்பது முக்கோடி தேவர்களை கூப்பிட்டு, இஷ்ட அவதாரத்தை கூப்பிட்டு, சில எக்ஸ்டரா அவதாரங்களை கூப்பிட்டு நடத்திய திருமணத்தில் உங்கள் தந்தை கலந்து கொண்டு வாழ்த்தி, அதன் பின் உங்கள் குடும்ப அடையாளமான கோபாலபுரம் வீட்டில் குடிபெயர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து, நீங்களும் இன்று முதல்வராகி மகிழ்ச்சியோடு உள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள். இதுவே நம் ஹிந்து கலாச்சாரம், பண்பாடு. வாழ்த்துகள். சிறப்பு!!! என பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+