தர்மயுத்த நாயகனோடு நிற்கும் “தர்மர்” - கடைசியா “அவர்” சாதித்தது இதான்.. ரொம்ப விஸ்வாசம்
சென்னை: ஒற்றைத் தலைமை கொண்டதாக அதிமுகவை மாற்றி எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்ட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு பக்கபலமாக நின்று கொண்டிருக்கிறார் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற அதிமுகவின் ஆர்.தர்மர்.
சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய சமயத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்த மாஃபா.பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். தர்மயுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். சந்தித்த முதல் தோல்வி இது

ஓபிஎஸுக்கு பிடித்த டீலிங்
அதன்பின்னர், கட்சி உங்களுக்கு ஆட்சி எங்களுக்கு என்ற டீலிங் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிடித்துவிட ஒரு வழியாக டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒன்றுசேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் வேட்பாளர்
முதலமைச்சராக எடப்பாடியே தொடர துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். இப்படியே ஆட்சியை நிறைவு செய்துவிட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற போட்டி எழுந்தது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசினர். சில நாட்கள் ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்களும் கருத்து மோதல்களுமே செய்தியாகின. ஒரு வழியாக இந்த முறையும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்று தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். இதிலும் எடப்பாடிக்கே வெற்றி கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
2021 தேர்தலும் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், அதிமுகவில் தோல்வியை பொருட்படுத்தாமல் அதிகாரப் போட்டிக்கு ஆயத்தமாகினார் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர். இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் யார் என இருவருக்கும் போட்டி தலைதூக்கியது. இதிலும் எடப்பாடி கை ஓங்க வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்து ஒருங்கிணைப்பாளராகவே தொடர்ந்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்
அதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் பெரியளவில் ஆளும் திமுக அரசுக்கு ஈடுகொடுத்து செயல்படாமல் இருந்த அதிமுகவில், அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான மோதல் வெடித்தது. பல நாட்களாக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்துவந்த நிலையில், முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று இருவரில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.தர்மருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தது எடப்பாடி தரப்பு. தர்ம யுத்தத்துக்கு பின் ஓ.பி.எஸ். வெளிப்படையாக சாதித்தது இது ஒன்றுதான்.

யார் இந்த அர்.தர்மர்?
ஆர்.தர்மர் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர். ஆனாலும், தென் மாவட்டங்களை கடந்து மற்ற பகுதிகளில் அதிக அறிமுகம் இல்லாதவர் தர்மர். அதிமுகவின் நீண்ட கால உறுப்பினராக இருக்கும் ஆர்.தர்மர் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் தர்மர். ஆனால், கீர்த்திகா முனியசாமிக்கே கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியான ஆர்.தர்மருக்கு மாநிலங்களவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஓ.பி.எஸ். தரப்பின் பரிந்துரையால் வழங்கி இருக்கிறது அதிமுக தலைமை.

கூடவே நிற்கும் தர்மர்
நேற்று இவர் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளார்கள் கங்கனம் கட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஓபிஎஸ் உடன் தோளோடு தோளாக நிற்கிறார். தர்மயுத்த சமயத்தில் ஓபிஎஸ் உடன் இருந்த மா.பா.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிவிட்ட நிலையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஓபிஎஸ் உடன் நிற்பது அவரது பலத்தை சற்று அதிகரித்து காட்டுகிறது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications