ஐடி உலகை உலுக்கும் "ரெசிஷன்".. ஒரே போன் காலில் மொத்த நிறுவனமும் காலி.. ஐடி ஊழியர்களுக்கு வேலை இழப்பு
சென்னை: 2024ம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் உலகம் முழுக்க ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன.
2023ல் இருந்து அதிகரித்து தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஜனவரியில் இது உச்சம் தொட்டுள்ளது.. 2023ல் வருடம் முழுக்க 240,000 வேலைகள் இழக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும்.

தொழில்நுட்ப துறைகளில் செய்யப்படும் பணிநீக்கங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து ஐடி துறையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க தொடங்குவதாகத் தெரிகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது வளர்ச்சியை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றன, மேலும் சவாலான சந்தை நிலைமைகள், மேற்கு உலக நாடுகளில் நிலவும் மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
ஒரே போன் கால்: உதாரணமாக Frontdesk நிறுவனத்தின் CEO, 2 நிமிட போன் கால் மூலம் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களையும் (200 பேர்) பணிநீக்கம் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராப்-டெக் நிறுவனமான Frontdesk, 200 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. CEO Jesse DePinto இரண்டு நிமிட Google Meet அழைப்பின் போது இந்த செய்தியை ஊழியர்களிடம் வெளியிட்டார். நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக மாநில ரிசீவர்ஷிப்பிற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
கூகுள்: அதேபோல் Alphabet இன் கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கூகுள் தனது விளம்பர விற்பனை குழுவில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அறிக்கையில், சில குழுக்கள் இந்த வகையான நிறுவன மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன, இதில் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் : அதேபோல் மைக்ரோசாப்ட் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட், எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஆகியவற்றிலிருந்து 1,900 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது, இது மொத்த மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் சுமார் 8% ஆகும். Mike Ybarra and Allen Adham நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஆலன் ஆதம் கூட நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.
மந்தநிலை: ஏற்கனவே 2024ல் உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் - Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2023ல் கடந்து உள்ளோம்.
ஆனாலும் உலக அளவில் 2024ல் பொருளாதார வீழ்த்தி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications