உலக நாடுகளை குலை நடுங்க வைக்கும் நிகழ்வு! அடுத்தடுத்து மந்த நிலைக்குள் நுழைந்த 2 பெரிய நாடுகள்! ஷாக்
சென்னை: ஒரே நாளில் இரண்டு நாடுகள் பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் பல நாடுகள் இதேபோல் பொருளாதார மந்த நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாடாக ஜப்பான் மந்த நிலைக்குள் சென்றுள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு, உற்பத்தி சரிவு காரணமாக ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த பொருளாதாரம் கடந்த காலாண்டில் மேலும் சரிந்த நிலையில் எதிர்பாராத விதமாக மந்தநிலைக்குள் சென்றுள்ளது.

பொருளாதார பட்டியலில் 2010 இல் அமெரிக்காவிற்குப் பின் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாவது இடத்தில் பின் தங்கியது. சீனா வேகமாக வளர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் ஜப்பான் இப்போது நான்காம் இடத்திற்கு சென்றுள்ளது. ஜெர்மனி இந்த மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பானின் GDP கடந்த ஆண்டு $4.2 டிரில்லியன் அல்லது சுமார் 591 டிரில்லியன் யென் என்ற அளவில் இருந்தது. ஜெர்மனியின் ஜிடிபி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஜெர்மனி ஜிடிபி $4.4 டிரில்லியன் அல்லது $4.5 டிரில்லியன் ஆகும். இதன் மூலம் ஜப்பான் நான்காம் இடத்திற்கு சென்றது மட்டுமின்றி.. பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த நாடு: அதேபோல் யு.கேவும் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இங்கிலாந்து மந்தநிலைக்கு சென்றது. ,மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அக்டோபர் மற்றும் டிசம்பர் இடையே 0.3% குறைந்துள்ளது. அங்கே பணவீக்கம் 5.25% ஆக உள்ள நிலையில், ஜிடிபி மேலும் 0.2 சதவிகிதம் குறைந்து மந்த நிலைக்குள் சென்றுள்ளது.
மந்தநிலை; ஏற்கனவே 2024ல் உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் - Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2023ல் கடந்து உள்ளோம்.
ஆனாலும் உலக அளவில் 2024ல் பொருளாதார வீழ்ச்சி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலை இழப்பு:
2023ல் இருந்து அதிகரித்து தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஜனவரியில் இது உச்சம் தொட்டுள்ளது.. 2023ல் வருடம் முழுக்க 240,000 வேலைகள் இழக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும்.
தொழில்நுட்ப துறைகளில் செய்யப்படும் பணிநீக்கங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து ஐடி துறையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க தொடங்குவதாகத் தெரிகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது வளர்ச்சியை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றன, மேலும் சவாலான சந்தை நிலைமைகள், மேற்கு உலக நாடுகளில் நிலவும் மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
ஒரே போன் கால்: உதாரணமாக Frontdesk நிறுவனத்தின் CEO, 2 நிமிட போன் கால் மூலம் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களையும் (200 பேர்) பணிநீக்கம் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராப்-டெக் நிறுவனமான Frontdesk, 200 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. CEO Jesse DePinto இரண்டு நிமிட Google Meet அழைப்பின் போது இந்த செய்தியை ஊழியர்களிடம் வெளியிட்டார். நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக மாநில ரிசீவர்ஷிப்பிற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
கூகுள்: அதேபோல் Alphabet இன் கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கூகுள் தனது விளம்பர விற்பனை குழுவில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அறிக்கையில், சில குழுக்கள் இந்த வகையான நிறுவன மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன, இதில் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் : அதேபோல் மைக்ரோசாப்ட் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட், எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஆகியவற்றிலிருந்து 1,900 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது, இது மொத்த மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் சுமார் 8% ஆகும். Mike Ybarra and Allen Adham நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஆலன் ஆதம் கூட நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications