Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியை ஓவர்டேக் செய்த ஸ்டாலின்.. இதுவரை வழங்கப்பட்டதிலேயே இப்போதுதான் பொங்கல் பரிசு பணம் அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகைதான் இதுவரை பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட ரொக்கத்திலேயே அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக அதிகபட்சமாக, 2021 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூபாய் 2,500 வழங்கி இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 3,000 வழங்குகிறார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

pongal tn government pongal gift

அதன்பிறகு, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022 ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் கிடைக்கும் எதிர்பார்த்து காத்திருத்த மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணமும் வழங்கும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 244 மொத்த ரேஷன் அட்டைதாரர்களில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்குவதற்காக 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டியும், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு என பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேசமயம், ரொக்கப்பணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936, 17,47,959/- செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள்வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகைதான் இதுவரை பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட ரொக்கத்திலேயே அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக அதிகபட்சமாக, 2021 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூபாய் 2,500 வழங்கி இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 3,000 வழங்குகிறார். அப்போதும் சட்டசபை தேர்தல் நடந்தது, இப்போதும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+