தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ரூ.5812 கோடி கோயில் நிலங்கள் மீட்பு.. ஹைகோர்டில் அரசு தந்த முழு பட்டியல்
சென்னை: தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில் பதில் அளித்த தமிழக அரசு, கடந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 812 கோடி ரூபாய் மதிப்பிலான 6,324 ஏக்கர் கோயில் நிலங்கள், 137 கிரவுண்ட் குளங்கள், , 186 கிரவுண்ட் பரப்பில் கட்டிடங்கள், 1,215 காலிமனைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்ல் இந்து சமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 75 வழிகாட்டுதல்களை பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள கடந்த 3 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட விதம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்தது.

தமிழக அரசு அளித்த விளக்கத்தில், சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் படி, கோயில்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை வழங்குவதற்காக, தொல்லியல் துறை நிபுணர்கள், ஆகம நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழ்நாடு முழுவது பல்வேறு கோயில்களில் நேரடி ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் இந்து அறநிலையத்துறை அளித்துள்ள இந்த விளக்கத்தில், கோயில்களில் உள்ள புராதன சிலைகள் சேதம், நிதி விவகாரங்கள் தொடர்பாக தேவைப்படும் நேரங்களில் அரசின் அனுமதியைப் பெற்று மத்திய கணக்குத் தணிக்கை குழுவை கொண்டு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கோயில்கள் சொத்து குறித்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கடந்த 2021 ஜூன் முதல் இதுவரை 351 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு பறக்கும் படைகளும், இதுவரை 179 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கோயில்கள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளாக கூறியுள்ள இந்து அறநிலையத்துறை , கோயில்கள் பராமரிப்புக்கும், விழாக்களுக்கும், ஊழியர்கள் ஊதியம் வழங்குவதற்காகவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுவதாகவும், உபரி நிதி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 – 24 ம் ஆண்டில் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 17 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்து அநிலையத்துறையின் விளக்கத்தில், கடந்த 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை கோயில்கள் திருப்பணிக்காக அரசு மானியமாக 101 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பராமரிப்புக்காக 2024 – 25 ம் ஆண்டில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் சொத்துக்கள் தணிக்கை செய்ய தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். 17 ஆயிரத்து 962 கோயில்களில், நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மே மாதம் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரத்து 812 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,324 ஏக்கர் நிலங்கள், 1,215 கிரவுண்ட் காலிமனை, 137 கிரவுண்ட் கோவில் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன 1,424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. சிலைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட 23 மையங்களில் 8,693 சிலைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய உயர் பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,842 அறைகள் கட்ட டெண்டர் கோரப்பட்டு, 1,833 அறைகள் கட்டுமானத்துக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 542 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கோயில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோயில்களில் ஊழியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணப் பலன்கள் விவரங்கள் குறித்தும் விரிவாக அறிக்கையில் விளக்கப்பட்டிருக்கிறது என்று இந்து அறநிலையத்துறை கூறியுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications