ரெட் அலர்ட் எச்சரிக்கை.. நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் தீவிர கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: நவம்பர் 25ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
முக்கியமாக சென்னையிலும் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் தீவிரமாக கனமழை பெய்து வந்தது. சென்னையில் இருக்கும் ஏரிகள் இதனால் வேகமாக நிரம்பியது.

சென்னை ஏரிகள்
முக்கியமாக சென்னையில் இருக்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. பல இடங்களில் வெயில் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும்
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகரிக்கும், பின் மழை தீவிரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25ம் தேதி தமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

மழை
நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு நவம்பர் 25ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கு பெய்யும்
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இதனால தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற விவரம் வரும் நாட்களில் வெளியிடப்படும். இந்திய பெருங்கடல், வங்கக்கடலில் 50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications