சிலிண்டர் ஏன் சிவப்பு கலரில் இருக்கு? நீலம், மஞ்சள் எதுக்கு? மக்கள் அறிய வேண்டிய நிறய குறியீடுகள்
சென்னை: இந்தியாவில் சமையல் எரிவாயு என்பது ஒவ்வொரு வீட்டின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனால், நாம் அன்றாடம் பார்க்கும் சிவப்பு நிற சிலிண்டர்களைத் தாண்டி, நீலம், மஞ்சள், வெள்ளை எனப் பல நிறங்களில் சிலிண்டர்கள் புழக்கத்தில் உள்ளன. இப்போது நடந்து கொண்டிருக்கும் சர்வதேச போர் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு இடையே, இந்த நிற வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது நுகர்வோருக்கும் தொழில் துறையினருக்கும் மிக அவசியமானது... அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நமது வீடுகளில் சாதாரணமாகக் காண்பது சிவப்பு நிற சிலிண்டர்கள்தான். இது வீட்டு உபயோகத்திற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டது.. இதில் மானிய விலையிலான எல்பிஜி வாயு நிரப்பப்பட்டிருக்கும்.

சிவப்பு நிறம் என்பது பொதுவாகவே "எச்சரிக்கை" மற்றும் "அபாயம்" என்பதைக் குறிக்கும் வண்ணம். எல்பிஜி வாயு மிக எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், அதை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே சர்வதேச அளவில் இதற்கு ரெட் கலர் பூசப்படுகிறது. வணிக ரீதியான சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது இவை எடையிலும் அளவிலும் கொஞ்சம் சின்னதுதான்.
வணிகத்தின் அடையாளம் - நீல நிற சிலிண்டர்
பெரிய பெரிய உணவகங்கள், ஹோட்டல்கள், கேட்டரிங் சேவைகளில் நீங்கள் நீல நிற சிலிண்டர்களைக் காணலாம். இவை வணிக ரீதியான அதாவது கமர்சியல் பயன்பாட்டிற்கானவை.
இதில் மானியம் இல்லாத எரிவாயு நிரப்பப்பட்டிருக்கும் என்பதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை விட இதன் விலை கொஞ்சம் அதிகமாகும்.. வணிக நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.. அந்த பிரிவினையை உறுதிப்படுத்தவே இந்த புளூ கலர் பயன்படுத்தப்படுகிறது.
உயிர்காக்கும் வெள்ளை நிற சிலிண்டர்
வெள்ளை நிற சிலிண்டர்கள் சமையல் பயன்பாட்டிற்கானவை கிடையாது.. இவை மருத்துவத் துறையில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ வாயுக்களை சேமிக்க பயன்படுகின்றன. மருத்துவமனைகள், எமர்ஜென்சி ஐசியூ பிரிவுகளில் மட்டுமே இதை பார்க்கலாம்.. மருத்துவ சிலிண்டர்களுக்கான பாதுகாப்பு விதிகள் மிகவும் சற்று கடுமையானவை. தப்பித்தவறி கூட இவை சமையல் பயன்பாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பளிச்சென்ற வெள்ளை நிறம் இதற்கு அளிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற சிலிண்டர்
தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் வெல்டிங் போன்ற பணிகளுக்கு மஞ்சள் நிற சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சேமிக்கப்படும் வாயுவின் தன்மை (புரோபேன் அல்லது பியூட்டேன்) மற்றும் அழுத்தத்தின் அளவை பொறுத்து இதன் நிறம் மாறுபடலாம். கடினமான தொழில்துறை பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால், இவை கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் கையாளப்படுகின்றன.
எனவே, எரிவாயு சிலிண்டர்களின் நிறம் என்பது வெறும் அழகிற்காக கிடையாது.. கிட்டத்தட்ட அது ஒரு மொழியாகவே செயல்படுகிறது. தற்போதைய உலகளாவிய நெருக்கடி நிலையில், தொழிற்சாலைகளுக்கான விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எந்த சிலிண்டர் எதற்கானது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்க உதவும்.
அதைவிட முக்கியமாக, , வீட்டு உபயோகச் சிவப்பு சிலிண்டர்களை வணிகப் பயன்பாட்டிற்குத் திருடுவதைத் தவிர்க்க இந்த நிற வேறுபாடு ஒரு முக்கிய அரணாக இருக்கிறது. பாதுகாப்பான பயன்பாட்டிற்கு இந்த நிறக் குறியீடுகளைத் தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்...!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications