கடலில் குளித்தபடி ரீல்ஸ்.. வாரி சுருட்டிய அலை.. என்ஜினியரிங் மாணவ, மாணவி பலி.. சென்னையில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்தபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவ - மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த ஆகாஷ், கிருத்திகா ஆகியோர் நேற்று எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடலில் இறங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை புழல் அருகே சூரப்பட்டில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தவர் ஆகாஷ். திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்தவர். புதுச்சேரியைச் சேர்ந்தவர் பலராமன் என்பவரது மகள் கிருத்திகா (21). இவரும் இதே கல்லூரியில் படித்து வந்தார்.

Reels video College student die after bathing in the sea at Chennai s Ennore Beach

ரீல்ஸ் வீடியோ எடுத்தனர்

நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அதே கல்லூரியில் படிக்கும் மேலும் சில நண்பர்களுடன் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரை பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது ஆகாஷ், கிருத்திகா மற்றும் இன்னொருவர் என 3 பேரும் கடலில் இறங்கினர். அப்போது புகைப்படம், செல்ஃபி எடுத்துக்கொண்டனர். குளிப்பதையும் வீடியோ எடுத்துள்ளனர்.

மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கிருத்திகா மற்றும் ஆகாஷ் தவித்தனர். சிறிது நேரத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் மற்ற நண்பர்கள் பதறிப்போயினர். உடனே அங்கே மீன்பிடி வலைகளை சீரமைத்து கொண்டிருந்த மீனவர்களை உதவிக்கு அழைத்தனர். அதன்பேரில் மீனவர்கள் கடலில் மூழ்கிய கிருத்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இருவரும் உயிரிழப்பு

ஆனால் அவர் கண்விழிக்காததால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஆகாஷை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக தேடினர். இந்த நிலையில் மாலையில் அவரது உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. தொடர்ந்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+