போலி பத்திரம் புகார் இனி வராது! "வீடியோ செக்!" தமிழக பத்திரப்பதிவு துறை அசத்தல்! மெசேஜ் வந்துருக்கா?
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பத்திரப்பதிவு துறை பல்வேறு அறிவிப்புகளை செய்து வருகிறது.. அந்தவகையில், இப்போதும் ஒரு அதிரடி நடைமுறையை கையில் எடுத்துள்ளது.
தமிழக பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை, நிறைய முறைகேடுகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.. அதாவது, நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால், போலி பத்திரங்களை தயார் செய்து, மோசடிகள் அதிகரித்துவிட்டன. இந்த போலி பத்திரத்தை பார்த்தால், அப்படியே நிஜ பத்திரிகைபோலவே இருக்கிறதாம்.

ஆள் மாறாட்டம்: ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம், பத்திரப்பதிவுகள் நடப்பது கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. காரணம், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
ஆனால் இந்த நடைமுறையும் மாறிவிட்டது.. இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. போலி பத்திரம் பதிவாகிவிட்டால், பதிவாளரே முன்வந்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ப சட்டதிருத்தமாகும்.
பத்திரப்பதிவு: அதுமட்டுமல்ல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியையும் தமிழக அரசு ஆன்லைனில் செய்து தந்துள்ளது. அப்படியிருந்தும்கூட, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது தமிழக பத்திரப்பதிவு துறை. சொத்துக்களை நீங்கள் பத்திரப்பதிவு செய்தால், அந்த பத்திரப்பதிவு நடந்ததை, அதை வீடியோ மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப் போகிறதாம்.
வீடியோ பதிவு: அதாவது, நீங்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து, பத்திரங்களை முறையாக பதிவு செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்வரை அனைத்துமே அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியில் அனைத்துமே வீடியோவாக பதிவாகிவிடும்.
இந்த வீடியோ பதிவினை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இந்த வீடியோவை, MX PLAYER,VLC PLAYER என்ற ஆப்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Mini player செயலியை டவுன்லோடு செய்து ஒலி, ஒளியுடன் காணலாம்.
நம்பிக்கை: இதன்மூலம், யாருடைய சொத்தையும் யாரும் உரிமை கொண்டாட முடியாது.. சொத்தை விற்பனை செய்துவிட்டு, அதை நான் விற்கவில்லை, போலி கையெழுத்து போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை இனி தடுக்க முடியும். வீடியோவை எடுத்து போட்டு காட்டி நீங்கள்தானே விற்றீர்கள் என்று பதிவுத்துறையினர் கேட்க முடியும். அந்தவகையில், இந்த வீடியோ ஆதாரம் மிகுந்த பலனை பெற்றுத்தரும் என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள். பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications