சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வார்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு தொற்று இல்லை.. உறவினர்கள் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரவாயலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.

Recommended Video

    கொரோனா வார்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு தொற்று இல்லை

    சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் செல்வி (48). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    Relatives of woman indulge in protest in Maduravoyal

    நேற்று ஏற்பட்ட மன உளைச்சலால் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவ முடிவுகள் வந்தது. இதையடுத்து அவரது உடலை எடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.

    இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் பின்னர் ஆம்புலன்சில் இருந்த செல்வியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர். அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் கொரோனா இல்லாமலேயே கொரோனா இருப்பதாக கூறி அழைத்து சென்று இப்படி சடலமாக கொண்டு வந்து போட்டு விட்டனரே என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்! இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!

    கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு இறந்தபின் கொரோனா இல்லை என மருத்துவ அறிக்கை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Relatives of woman who commits suicide in Corona centre at Chennai Maduravoyal, involve in protest after they got Corona negative report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X