அசுர வேகம்..கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! டிடிஎஃப் வாசன் ஓட்டிய பைக் இதுதான்! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் நேற்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் ஓட்டிய பைக் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

டிடிஎஃப் வாசன் தன்னுடைய அதிவேக பைக் ரைடுகளால் பரவலாக அறியப்படுகிறார். விதிகளை மீறி பைக்கை ஓட்டுவது, அதை லைவாக படமெடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவது என அடிக்கடி இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவரை பின்பற்றி பல இளைஞர்களும் பைக்குகளை வேகமாக இயக்கி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்று வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இவரது விதிகளை மீறிய பைக் ரெய்டுகளுக்கு போக்குவரத்து காவல்துறையும் அவ்வப்போது அபராதங்களை விதித்து வருகிறது.

Release of information about the bike ridden by TTF Vasan who was involved in the accident

இருப்பினும் இவர் விதி மீறல்களை நிறுத்தியபாடில்லை. இப்படி இருக்கையில்தான் இவரது பைக் ரெய்டை வைத்து மஞ்சள் வீரன் திரைப்படம் இயக்க இருப்பதாக 'செல்அம்' எனும் இயக்குநர் அறிவித்திருந்தார். திரைப்படம், விவாத நிகழ்ச்சி என பிஸியாக இருந்த டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சில பைக் ரைடுகளையும் மேற்கொண்டு வருகிறார். அப்படித்தான் நேற்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இவர் பைக் ஓட்டிக்கொண்டு வந்திருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் உண்மை தெரிய வந்தது. அதாவது இவர் வீலிங் செய்ய முயன்றபோது தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். இந்த பயணத்தின்போது மணிக்கு 120-140 கி.மீ வேகத்தில் அவர் பைக்கை இயக்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது வாசனின் கை உடைந்திருப்பதால் சிக்கிச்சை பெற்று வருகிறார். அதேபோல விதிகளை மீறி வாகனத்தை ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம், அவர் ஓட்டி வந்த பைக் குறித்து பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன. அதாவது இவர் Suzuki Hayabusa GSX 1300 R எனும் அதி நவீன, அதிவேக பைக்கைதான் ஓட்டி வந்து விபத்தில் சிக்கியுள்ளார். இந்த வகை பைக்கின் விலை ரூ.16 முதல் ரூ.19 லட்சம் ஆகும். அதேபோல இது மணிக்கு 299 கி.மீ முதல் 312 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாகும். இது 3.2 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதேபோல 6.8 விநாடிகளில் 200 கி.மீ வேகத்தை எட்டும்.

மொத்தம் 6 கியர்கள் கொண்ட இந்த பைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் 17 கி.மீதான் மைலேஜ் தரும். ஆனால் பொதுப் போக்குவரத்து சாலைகள் இந்த பைக்குகளை இயக்கும் அளவுக்கு தரமானதாக இருக்கவில்லை என்று போக்குவரத்துதுறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய சாலைகளை பொறுத்த அளவில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்வதே மிக வேகமாகும். அதிலும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அதிவேக பயணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+