புது வீடு கட்டுறீங்களா? அரசு சிமெண்ட்களை எப்படி வாங்குவது என்பதில் குழப்பமா? விவரம் இதோ!
சென்னை: தமிழக அரசின் 'வலிமை சிமெண்ட்' பற்றிய விவரம் அறிவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களை, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அரசின் சிமெண்ட்களை எங்கு வாங்கலாம், என்ன விலையில் வாங்கலாம், விற்பனை முகவர் விவரம், சிமெண்டின் தரம், என்பன உள்ளிட்ட எல்லா வித கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இதனால் இனி சிமெண்ட் பற்றி விசாரிக்க கடைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புது வீடு கட்ட திட்டமிட்டு வருபவர்களும், புது வீடு கட்டிக்கொண்டு இருப்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக தமிழக தொழில்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

போர்ட்லேண்ட் சிமெண்ட்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அரியலூர் மற்றும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைகளில் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் (OPC) மற்றும் பொசலோனா போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகிய இரண்டு வகையான சிமெண்டுகளை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

வலிமை சிமெண்ட்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் கடந்தாண்டு நவம்பர் மாதம் வலிமை சிமெண்ட் என்ற புதிய வகை சிமெண்ட்டை அறிமுகப்படுத்தினார். இந்த சிமெண்ட் மிகவும் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிமெண்டை பற்றிய தகவலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

1800 599 7635 என்ற எண்
இந்த புதிய வகை 'வலிமை சிமெண்ட்' தொடங்கப்பட்டது முதல் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெ.டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 'வலிமை சிமெண்ட்' பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி அறியவும், இதன் தரம் பற்றி அறிந்து கொள்ளவும், இந்த சிமெண்ட்டை விற்பனை செய்வதற்கான சிமெண்ட் விற்பனை முகவராக நியமனம் பெறுவது போன்ற விவரங்களை அறிய தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 599 7635 என்ற எண்களை வெளியிட்டுள்ளது.

விற்பனை முகவர்கள்
இந்த தொலைபேசி எண்ணைத் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த கட்டணம் இல்லா தொலைபேசி இணைப்பின் மூலம் "வலிமை சிமெண்ட்" கிடைக்கும் இடங்கள், அதன் தரம் மற்றும் உறுதி மற்றும் விற்பனை முகவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications