ஒரு நாளுக்கு வெறும் 8 ரூபாய் தான்.. ஜியோ வழங்கும் செம ரீசார்ஜ்..! ஆண்டு பிளான்களில் எது பெஸ்ட்?
சென்னை: ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட 2 ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. இந்த பிளான்களின் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்கள் புதுப்புது ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மேலும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான பிளான்களை வழங்குகிறது ஜியோ.
ஜியோ ரூ.2999 ரீசார்ஜ் பிளான்
டேட்டா: ஒரு நாளைக்கு 2.5 ஜிபி (ஒரு வருடத்திற்கு மொத்தம் 912.5 ஜிபி)
கால்ஸ்: அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள்.
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
கூடுதல் பலன்கள்: ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன்.
இந்த பிளானின் தினசரி செலவு தோராயமாக ரூ.8.22. இது நீண்ட கால சேமிப்பை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிக்கனமான தேர்வாக உள்ளது. மாதாந்திர ரீசார்ஜ்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருடாந்திரத் திட்டம் சிறப்பான பலன்களை வழங்குகிறது.
ஜியோ ரூ.3,599 ரீசார்ஜ் பிளான்
டேட்டா: ஒரு நாளைக்கு 3 ஜிபி (ஒரு வருடத்திற்கு மொத்தம் 1,095 ஜிபி)
கால்ஸ்: அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகள்
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்.
கூடுதல் பலன்கள்: ரூ.2,999 திட்டத்தில் கிடைக்கும் அனைத்து பலன்களும் இந்த பேக்கிலும் கிடைக்கும். ஃபேன்கோடு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட OTT சப்ஸ்கிரிப்ஷன்.
இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.9.85 செலவாகும். அதேநேரம் இது அதிக தினசரி டேட்டா வரம்பையும் கூடுதல் பொழுதுபோக்கு சலுகைகளையும் வழங்குகிறது.
மீடியம் டேட்டா யூசர்களுக்கு: உங்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா போதுமானதாக இருந்தால், இந்த பிளான் ஏற்றது. ரூ.2,999 திட்டம் குறைந்த செலவில் அனைத்து அத்தியாவசிய நன்மைகளையும் வழங்குகிறது.
அதிக டேட்டா பயன்படுத்தும் யூசர்களுக்கு: உங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா தேவைப்பட்டால் மற்றும் கூடுதல் OTT சப்ஸ்கிரிப்ஷன் விரும்பினால், ரூ.3,599 திட்டம் சிறந்த பொருத்தமான திட்டம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications