எழும்பூர் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை மாற்றப்பட்டது ஏன்? தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் மட்டுமின்றி அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க, 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைக்கழிக்க வைத்த கொடுமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் புகார் கூறியிருந்த நிலையில் இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை விரைவு ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் என பல ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நிறுத்தப்படும் பிளாட்பார்ம் நம்பர் 4 க்கு பதிலாக 5 ல் நிறுத்தப்பட்டதாகவும், ஒரே ஒரு அதிகாரிக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கூறியிருந்தார். மதுரை எம்.பி கூறுகையில்,
சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு(16-11-2023) எழும்பூர் இரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் நடைமேடையான நான்காவது நடைமேடையில் தான் நிறுத்தப்படும். நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு வண்டி ஐந்தாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்குமங்குமாக அலைக்கழிந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.
நான்காவது நடைமேடையிலும் ஒரு இரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் யாருமே ஏறாத இரயிலாக அது இருந்தது. இரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை இராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது என ரயில்வே அதிகாரி கூறினார். ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு இரயில்.
அந்த ஒரு நபர் படிக்கட்டுகளில் மேலேறி இறங்கி அடுத்த நடைமேடைக்கு செல்லும் சிரமத்தை கொடுக்காமல் வசதி செய்துதரப்பட வேண்டும் என்பதற்காக சுமார் 1000 பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் புகாருக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எழும்பூர் ரயில் நிலையம் நடைமேடை 4 ல் இருந்து தொடர்ச்சியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மாலை 6 மணி முதல் இரவு 8.40 மணி வரை அந்த நடைமேடை பயன்பாட்டில் உள்ளது. சோழன் விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையம் வந்த உடன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. நடைமேடை எண் 5ல் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நிறுத்தப்பட்டது. பரமாரிப்பு பணிகள் எதுவும் தேவைப்படாததால் பெட்டிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
9.40 மணிக்கு புறப்பட வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் ஏறியிருந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நடைமேடையை மாற்றுவது என்பது பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.எனவே தான் ஆய்வு ரயில் நான்காவது நடைமேடையிலும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 5-வது நடைமேடையிலும் நிறுத்தப்பட்டது. இது முற்றிலும் செயல்பாட்டு காரணங்களுக்காக மட்டுமே ஆகும். அனைத்து ரயில் பயணிகளுக்கும் எப்போதும் தெற்கு ரயில்வே சிறந்த சேவையையே வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications