ரெமிடிஸ்வர் மருந்து விற்பனை.. விரைவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விற்க முடிவு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னையில் கீழப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் விற்கப்பட்டு வரும் ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விற்கப்படும் என்று தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசு மிக சிறப்பாக திட்டங்களை வகுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் உடன் ஆலோசனைகளை செய்து, பல எக்ஸ்பர்ட்களை அழைத்து வந்து முறையாக கொரோனாவிற்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால் ரெமிடிஸ்வர் விநியோகம் மட்டும் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. சென்னையில் மட்டும் விநியோகம் செய்யப்பட்ட ரெமிடிஸ்வர் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை
இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மட்டுமே ரெமிடிஸ்வர் விற்கப்பட்டு வருகிறது. அங்கும் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆராய சென்னை ஹைகோர்ட் சுயமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் இன்று ரெமிடிஸ்வர் விற்பனை குறித்து சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி விளக்கம் கேட்டார்.

விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்த தலைமை அரசின் வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம், சென்னையில் தற்போது கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் விற்கப்படும் ரெமிடிஸ்வர் விரைவில் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்படும். அங்கு நிறைய கவுண்டர்கள் திறக்கப்படும். தினமும் 20 ஆயிரம் மருந்துகள் விற்கப்படும் வகையில் கவுண்டர்கள் திறக்கப்படும்.

கவுண்டர்கள்
தமிழகத்திற்கு இதுவரை 250000 ரெமிடிஸ்வர் வந்துள்ளது. எல்லாமும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . தமிழகத்திற்கு தினமும் 20 ஆயிரம் ரெமிடிஸ்வர் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு அவ்வளவு ரெமிடிஸ்வர்களை வழங்குவது இல்லை.

7000
தமிழகத்திற்கு 7000 ரெமிடிஸ்வர் மட்டுமே தினமும் கிடைக்கிறது. ஆனால் அதுவும் கூட உறுதியாக வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் மக்கள் ரெமிடிஸ்வர் கிடைக்காமல் அவதிப்படுவதாக தமிழக அரசு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications