"நடைபாதை நடப்பதற்கே”.. தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். சென்னை தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் மற்றும் சாலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் விபத்துகளில் சிக்குவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Remove Footpath Encroachments High Court Issues Stern Directive to Tamil Nadu Government

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பான நடைபயணத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நடைபாதைகள் ஆக்கிரமிப்பு அற்றதாக இருப்பது இந்திய அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் ஒவ்வொரு குடிமக்களின் உரிமை என்றும், தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+