எங்க ஏஜெண்டை துரத்திட்டு “கள்ள ஓட்டு” போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
சென்னை: தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் பதற்றம் நிலவினாலும், அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்: இந்நிலையில் தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், "தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்ட்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார்: மேலும், மயிலாப்பூர் 122ஆவது வட்டத்தில் 13ஆவது வாக்குச்சாவடியில் எங்கள் பூத் ஏஜெண்ட்டுகளை வெளியே அனுப்பிவிட்டு 50 பேர் புகுந்து கள்ள ஒட்டு போட்டுள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்." என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இதேபோல தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடந்துள்ளன. எங்கள் நிர்வாகிகள் அதனை தடுத்துள்ளனர். தியாகராயர் நகரில் சில வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன” என்றார்.
பாஜக ஆதரவாளர்கள் பெயர் நீக்கம்: மேலும், பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது. வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம்.
தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை: வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும். பல்வேறு பிரச்சனை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக நடத்தி உள்ளதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், தங்கள் தொகுதியில் தலா 1 லட்சம் வாக்காளர்கள் பெயரை நீக்கி விட்டதாகவும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications