H.Raja: எச்.ராஜாவிடம் நிருபர் கேட்டாரே பாருங்க ஒரு கேள்வி.. உடம்பே நடுங்கி போச்சு!
சென்னை: தாம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடம்பே நடுங்கி போச்சுங்க! அப்படி அவர் என்னதான் கேள்வி கேட்டார் என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் அடித்தளத்தை மேம்படுத்த மண்டல குழு ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் தாம்பரம், பல்லாவரம் சட்டசபை தொகுதிகளில் மண்டல குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 36 ஆண்டுகள் நான் பாஜகவில் நிர்வாகியாக இருக்கிறேன். ஒரு நாளும் கூட்டணி குறித்து நான் பேசியது கிடையாது. தமிழகம் இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நடத்துகிறது.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளிவராததற்கு மத்திய அரசு காரணம் இல்லை. விஜய் எப்போது மத்திய அரசை குற்றம்சாட்டினார். நாங்கள் ஒன்றும் அதற்கு குறுக்கே நிற்கவில்லை.
ஜனநாயகன் படத்தில் சில விஷயங்கள் இருப்பதால் தணிக்கை குழு இன்னும் அனுமதி தரவில்லை. தணிக்கை குழுவிடமே அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்றார்.
அப்போது நிருபர் ஒருவர் "நீங்கள் நடித்த கந்தன்மலை படம் எப்போது வெளியாகும்" என கேள்வி எழுப்பியபோது எச்.ராஜா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகத்தை பார்க்கணுமே!
அப்போது ராஜா, "படம் வெளியில் வந்துவிட்டது சார், 1 மில்லியன் வியூஸ் கடந்து போயுள்ளது" என தெரிவித்தார். இந்த வீடியோவை திமுகவினர், பாஜக எதிர்ப்பாளர்கள் வைரலாக்கி அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
வீரக்குமார் இயக்கத்தில் எச்.ராஜா முக்கிய கேரக்டரில் நடித்த படம் கந்தர்மலை. இந்த படத்திற்கு தியேட்டர் கிடைக்காததால் தாமரை எனும் யூடியூப் சேனலில் வெளியானது. இந்த படத்தின் மொத்த நேரமே 1 மணி நேரம்தான். இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த படத்தில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன. திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில காட்சிகள் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம், நாடக காதல், சாதி ரீதியான மோதல், ஆணவக் கொலை, காவல்துறையினரின் அதிகாரம் போன்ற பல விஷயங்கள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தின் சாராம்சம் என்ன என்பதை புரிந்து கொள்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கந்தன் மலை படத்தின் கதை கரு என்னவென்றால் இந்து மதத்தை பாதுகாக்கும் போராளியாக எச் ராஜாவும், அதனை எதிர்க்கும் ஒரு கூட்டத்திற்கு இடையே நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதிலிருந்தே எச்.ராஜாவை பலர் டிரோல் செய்து வந்தனர். இந்த படத்தில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியை நிறுவன தலைவர் திருமாறன், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸில் "இந்து மதத்திற்கு விரோதம் செய்தால் அழிந்து போவார்கள்" என்ற வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications