குடியரசு தின விழா.. ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்றைய தினம் மாலை தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் மாலை ஆளுநர் ஆர் என் ரவி சார்பில், தேநீர் விருந்து நடைபெறுகிறது.

இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இந்த நிலையில் தான் தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு முதல் முறையாக ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியிருப்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!











Click it and Unblock the Notifications