Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் கொடியேற்றுகிறார்.. குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை! சென்னையில் மேஜர் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26 ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.

நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு நாடே தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றி வைக்கவுள்ளார். இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில ஆளுநர்கள், மாநில தலைநகரில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளனர்.

Chennai Republic day 2025

இந்தாண்டு குடியரசு தினவிழாவையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு வெளியேறிச் சென்றார். மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி ஆளுநர் ரவி சென்னை மெரினா கடற்கரைசாலையில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறும்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவின் முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற குடியரசு தின ஒத்திகை நிகழ்வில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவது போல் ஒத்திகைகள் நடைபெற்றது. மேலும் முப்படை வீரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்றது.

இன்று தொடங்கி 22, 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினம் அன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடிய மட் ரோடு ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பபட்டு ராயபேட்டை 1 பாயீண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ, வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி. டி.டி.கே. சாலை, கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

டாக்டர். பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜீ.பி.ரோடு, இராயபேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை). ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம். அண்ணா சாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+