Republic Day 2026 Wishes Tamil : தேசபற்றுடன் கூடிய குடியரசு தின வாழ்த்துக்களை பகிர அழகிய படங்கள் இதோ
Republic Day Wishes 2026 in Tamil (இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள் 2026): இந்தக் குடியரசு தினத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடுங்கள்! அவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேடித் தொகுக்கப்பட்ட குடியரசு தின வாழ்த்துச் செய்திகள் மற்றும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள் இதோ உங்களுக்காக.
நமது நாட்டின் வீரத்தையும், ஒற்றுமையையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றும் உன்னதமான நாள் ஜனவரி 26. இந்த 2026-ஆம் ஆண்டு, இந்தியக் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் வகையில் 77-வது குடியரசு தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.

நமது தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து, இந்தியாவை வல்லரசுப் பாதையில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். பிறந்துள்ள இந்தத் திருநாள், உங்கள் வாழ்வில் புதிய உத்வேகத்தையும், வளத்தையும், நாட்டுப்பற்றையும் பெருக்குவதாக அமையட்டும்.
உறவுகளுடனும் நண்பர்களுடனும் இந்தத் தேசியத் திருவிழாவைக் கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்வோம். இந்த 2026 குடியரசு தினம் நமது இந்தியத் திருநாட்டின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றட்டும். அந்த வகையில், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளக்கூடிய அழகிய 2026 குடியரசு தின வாழ்த்துப் படங்கள் இதோ.
குடியரசு தின வாழ்த்துக்கள்:
எண்ணங்களில் சுதந்திரமும்
வார்த்தைகளில் உண்மையும்
இதயத்தில் அமைதியும்
நினைவுகளில் சரித்திரமும்
நிறைந்திருக்கும் இத்தருணத்தில்
தாய் மண்ணே உனை வணங்குகிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் 2026:
இந்தியன் என்பது
நம் பெருமை
வேற்றுமையில் ஒற்றுமை
என்பது நம் மகிகை
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்து படங்கள்:
சகோதரத்துவம் சமத்துவம்...
நம் இந்தியாவின் அடையாளம்..
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்:
ஒன்றே நாடு.. ஒன்றே அரசியலமைப்பு..
வேற்றுமை எதற்கும்..
உரிமைகளை உணர்வோம்..
கடமைகளை செய்வோம்..
உழைப்போம்.. உயர்வோம்..
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்து செய்தி:
ஜனநாயகம் எங்கள் வலிமை..
ஒற்றுமை எங்கள் அடையாளம்..
சமத்துவம் எங்கள் கொள்கை..
சகோதரத்துவம் எங்கள் மேன்மை..
மதசார்மற்ற நாடு.. நம் இந்திய குடியரசு நாடு..
குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின கவிதைகள்:
பண்பட்ட பாரத நாட்டில்
வாழ்வது அருமை
பண்பாட்டை சொல்லித்தந்த
தமிழர்நாட்டில் வாழ்வது பெருமை
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

குடியரசு தின விழா கவிதைகள்:
இந்தியனாய் ஒன்றாக நின்று
நாட்டின் பலமாய் இருந்து
வளர்ச்சியை நோக்கி
முன்னேற உழைப்போம்
குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின ஹைக்கூ கவிதைகள்:
தியாகிகள் பெருமை நினைந்து
தினம் பேசுவது மட்டுமல்ல
தேசபக்தி தனித் திறமையதை
வளர்த்து உலகில் நம் தேசத்தின்
புகழ் உயர்த்துவதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துக்கள்

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2026:
இந்தியா என் தாய்நாடென்று
வெறுமனே இயம்புவது
மட்டுமல்ல தேசபக்தி
நம் இன ஒற்றுமை
இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து
காப்பதே தேசபக்தி
குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தினம் 2026 வாழ்த்து செய்திகள்:
மனதில் சுதந்திரம்,
வார்த்தைகளில் நம்பிக்கை,
இதயத்தில் பெருமை
உள்ளத்தில் நினைவுகள்
குடியரசு தினத்தில் தேசத்திற்கு
வணக்கம் செலுத்துவோம்
குடியரசு தின வாழ்த்துக்கள்

-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications