கவர்ச்சி விளம்பரங்களை நம்பி வீட்டு மனை, வீடு வாங்க போறீங்களா.. பில்டர்களுக்கு ரெரா எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) ரியல் எஸ்டேட் மற்றும் பிரபல கட்டுமான நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பல நிறுவனங்கள் கவர்ச்சிரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. ஆனால் நடைமுறையில் வேறாக உள்ளன. இந்நிலையில் விதிகளை மீறினால், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி திட்ட மதிப்பீட்டில் ஐந்து சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி மற்றும் குடியிருப்புகளை விற்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. ஆனால் நடைமுறையில் பல்வேறு விஷயங்கள் வேறாக உள்ளன. விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பது மட்டும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருக்கும். சில நிறுவனங்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளன. விளம்பரத்தை நம்பி அணுகுவோர் பின்னாளில் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) பத்திரிக்கைகளில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அமைப்பு கூறுகையில், "கட்டட மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம், 2016, 01.05.2017 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது. சட்டப்பிரிவு 11 (2)ன் படி திட்ட மேம்பாட்டாளரால் வெளியிடப்படும் விளம்பரம் அல்லது வழங்கும் தகவல் தொகுப்பேடு அல்லது வெளியீடுகள் ஆகியவற்றில் முதன்மையாக குழுமத்தின் இணையதள முகவரி மற்றும் குழுமத்தில் பெறப்பட்ட திட்டப் பதிவு எண் மற்றும் இடைநிகழ் குறிப்புகள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
எந்தவொரு திட்ட மேம்பாட்டாளரும் கட்டட மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம், 2016ல் உள்ள பிரிவு 11 (2) ஐ மீறினால், சட்டப் பிரிவு 61ன் கீழ் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

சட்டப்பிரிவு 61ன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
எந்தவொரு திட்ட மேம்பாட்டாளரும் பிரிவு 3 அல்லது பிரிவு 4 அல்லது ஒழுங்குமுறைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகளை மீறினால், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி திட்ட மதிப்பீட்டில் ஐந்து சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். திட்ட மேம்பாட்டாளர்கள் நெகில் பலகை (Flex Board), துண்டறிக்கை (Pamphlet), சிற்றேடு (Brochure), கையேடு (Leaflet) ஆகியவற்றில் திட்டப் பதிவு எண் குறிப்பிடாமல் விளம்பரம் செய்கிறார்கள். மேலும் திட்ட மேம்பாட்டாளர்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பியும் மற்றும் பிற ஊடகங்களில் குறுஞ்செய்தியாகவும் வெளியிடுவது குழுமத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
பிரிவு 11 (2)ன் கீழ் திட்டப் பதிவு விவரங்கள் விளம்பரத்தில் முதன்மையாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும் சில திட்ட மேம்பாட்டாளர்கள் விளம்பரங்களில் திட்டப் பதிவு எண்ணை வெளியிடுகின்றனர். ஆனால் திட்டப்பதிவு எண் சிறிய எழுத்துறுவிலும் மற்றும் படிக்க இயலாத நிலையிலும் குறிப்பிடுகின்றனர்.

எனவே, அனைத்து திட்ட மேம்பாட்டாளர்கள்/அமைப்பாளர்கள் திட்டங்களை பதிவு செய்யும்பொழுது குழுமத்தினால் வழங்கப்படும் பதிவு எண் போன்ற விவரங்களை விளம்பரம் மற்றும் இதர ஊடகங்களில் மிக எளிதாக படிக்கக் கூடிய எழுத்துறுவில் வெளியிட வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பு "அனைத்து திட்ட மேம்பாட்டாளர்கள்/அமைப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது" என கருதப்படும். மேலும் தனித்தனியான அறிவிப்பு வழங்கப்படமாட்டாது." இவ்வாறு தமிழ்நாடு கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications