ரூட் மாறும் மாநகர பேருந்துகள்! பரிந்துரையை வெளியிட்ட போக்குவரத்து குழுமம்.. சென்னை மக்களே கவனம்
சென்னை: சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்ற சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரயில் நிலையங்களில் எனில் அது சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள்தான். இந்நிலையில், வெளி மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம், வேலூர் என மேற்கு மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

அதேபோல தென் மாவட்டங்கள் முழுமைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை உள்ள பாதைகள் மூன்று வழி பாதையாக மட்டுமே இருக்கிறது. எனவே தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் எழும்பூர் வரை தடையின்றி வந்துவிடுகிறது.
ஆனால், அங்கிருந்து கடற்கரை வருவதற்கு தாமதமாகிறது. இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதேபோல எழும்பூரிலிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இந்த மூன்று வழிப்பாதை காரணமாக தாமதமாக இயக்கப்படுகிறது.
எனவே இந்த பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஜூலை 1ம் தேதி முதல், சென்னை கடற்கரையிலிருந்து, சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து பறக்கும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல தற்போது சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றவும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. அதாவது சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் வரும் 26ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
இதனையடுத்து 27ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பறக்கும் ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கு காரணம் சென்னை கடற்கரை டூ எழும்பூர் வரை அமைய உள்ள நான்காவது ரயில் தடம்தான். எனவே பொதுமக்கள் பறக்கும் ரயில் சேவையை எளிதாக அணுக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகள், சிந்தாதிரிப்பேட்டை வழியாக இயக்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எனவே விரைவில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு அண்ணாசாலை டூ சென்ட்ரல் மாநகர பேருந்துகள் இனி சிந்தாதிரிப்பேட்டை வழியாக இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications