அடச்சீ.. ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி.. கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி வீடியோ எடுத்ததுடன், வீட்டில் இருந்த 40 பவுன், பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவில் கங்கா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியான இவர் கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கங்கா வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளார்கள், வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். கதவை பாதி திறந்த நிலையில் கங்கா பதில் சொல்லி கொண்டிருந்திருக்கிறார்.

கட்டிப்போட்டனர்
இந்நிலையில் மர்ம நபர்கள் கங்காவிடம் பேசியபடியே திடீரென கதவை திறந்து கொண்டு அதிரடியாக வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். பின்னர் கங்காவை கத்தியை காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள். பின்பு வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளார்கள்.

மர்ம நபர்கள்
கங்காவின் கையை கத்தியால் வெட்டிய மர்மநபர்கள், மூதாட்டி என்றும் பாராமல் அவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளார்கள்.அத்துடன் இதை பற்றி போலீசில் புகார் செய்தால் அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மூதாட்டியை மிரட்டி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள்.

அரும்பாக்கம் போலீஸ்
அவர்கள் அங்கிருந்து போன பின்னர் கங்கா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஓடிவந்தார்கள். கங்கா கட்டிப்போட்ட நிலையில், ஆடையின்றி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

கடன் வாங்கினாரா?
சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கங்காவின் மகன் மகாதேவன், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கி இருக்கிறார். மேலும் அவர் நடத்தி வரும் நிறுவனத்தில் தொழில் போட்டி இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
எனவே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவருடைய மகனை தேடி வந்தார்களா?

பெரும் பரபரப்பு
அப்படி வந்தவர்கள் வீட்டில் மகாதேவன் இல்லாததால் கங்காவை வீடு புகுந்து கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அவரை அவமானப்படுத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சென்னை அரும்பாக்கம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications