விஜய் கேபினட்டில் போதை தடுப்பு துறை அமைச்சர் இவர் தானாம்.. ரவி ஐபிஎஸ் கொடுத்த ரிப்ளைய பாருங்க!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சராகும்போது அவரது அமைச்சரவையில், “போதை கடத்தல் தடுப்பு பிரிவு அமைச்சர் பொறுப்பு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவிக்கு தான்” என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ரவி கொடுத்துள்ள ரிப்ளையை பாருங்க!
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவரது காவல்துறை பணிகளைப் பற்றி அறிந்திராத 2கே கிட்ஸ், அவரது பதிவுகளுக்கு போடும் கமெண்ட்கள் அட்ராசிட்டி ரகம். அதற்கு அவரது ரிப்ளை 'தக் லைஃப்' மொமெண்ட்கள் தான்.

தாம்பரம் காவல் ஆணையராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ரவி ஐபிஎஸ், தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். தனக்கென யூடியூபில் தனி சேனல் வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரீல்ஸ், ஷார்ட்ஸ்களையும் வெளியிட்டு, சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர்களுக்கு செம டஃப் கொடுத்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் கலக்கும் ரவி: 2கே, 2K10 கிட்ஸ்களின் புகலிடமான இன்ஸ்டாகிராமிலும் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு தனது ஆக்டிவிட்டிகளை பகிர்ந்து வருகிறார் முன்னாள் போலீஸ் அதிகாரியான ரவி. சமீபத்தில் லண்டன் சென்றிருந்த முன்னாள் டிஜிபி ரவி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வீட்டுக்குச் சென்று அதுகுறித்த வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு 'வணக்கம் லண்டன்' என பதிவிட்டிருந்தார். அதில் 2கே கிட் இளைஞர் ஒருவர் "சூப்பர்டா மச்சான் அருமை" என கமெண்ட் செய்தார். அதை பார்த்து அதிர்ச்சியான ரவி, "டேய் யார்ரா நீங்கள்லாம்" என கேட்க, தற்போது அந்த பதிவு வைரலானது.

2கே கிட்ஸ் அட்ராசிட்டி: முன்னாள் டிஜிபி ரவியின் காவல்துறை பணிகளை பற்றி அறியாத 2கே கிட்ஸ் பலரும், இஷ்டத்திற்கு அவரது வீடியோக்கள், புகைப்படங்களுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். அவர்களுக்கு, கிண்டலாக ரிப்ளை கொடுத்து அப்ளாஸ் அள்ளி வருகிறார் ரவி.
அந்தவகையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார் ரவி. அதற்கு ஒரு ரசிகர், "வருங்கால தமிழக போதை மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அமைச்சர்" என கமெண்ட் செய்துள்ளார்.
ரவி தக்-லைஃப் ரிப்ளை: அதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கொடுத்த ரிப்ளை தான் அல்டிமேட். "யாராவது சொல்லி அவன நிறுத்துங்களேண்டா.." என தற்போது ட்ரெண்டாக வலம் வரும் கோபி சுதாகர் காமெடி வசனத்தை ரிப்ளையாக போட்டுள்ளார் ரவி.

அந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல: முன்னதாக, ரவியின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், "அடுத்த முதலமைச்சர்" என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ரிப்ளை கொடுத்த ரவி, "எல்லாரும் கேட்டுக்கோங்க.. களம் எட்டுல கமெண்ட் போட்டிருக்க அந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என ஆடுகளம் டெம்ப்ளேட்டை போட்டிருக்கிறார்.
யார் இந்த ரவி ஐபிஎஸ்?: 2கே கிட்ஸுக்கு, சோசியல் மீடியா இன்ப்ளூயன்சராக அறிமுகமாகி இருக்கும் ரவி ஐபிஎஸ், தனது பணிக்காலத்தில் சிறந்த போலீஸ் அதிகாரியாகப் பெயர் பெற்றவர். 1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.எஸ்.பி ஆ பணியைத் தொடங்கினார். அதன் பிறகு ஓசூரில் ஏ.எஸ்.பி யாகப் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டு எஸ்.பியாக பதவி உயர்வுபெற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றினார். பின்னர், திண்டுக்கல், சேலத்தில் டி.ஐ.ஜியாகவும் பணியாற்றினார்.
அவர் பணியாற்றிய பகுதிகளில் ஏற்பட இருந்த சாதி கலவரங்களை தடுத்து அமைதியை நிலைநாட்டினார். பின்னர் சென்னையில் சட்டம், ஒழுங்கு இணை கமிஷனராகவும், போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனராக பணியாற்றினார். சென்னையில் இணை ஆணையராக ரவி பணியாற்றியபோது முக்கிய ரௌடிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும், ரௌடிகளின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிகளில் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்து பாராட்டைப் பெற்றார்.

சிறந்த அதிகாரி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் ஏ.டி.ஜி.பியாக ரவி பணியாற்றியபோது சிறார் ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ரவி ஐபிஎஸ் கொண்டு வந்த "காவலன் SOS ஆப்" குறுகிய காலத்தில் தமிழக மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. ரவி ஐ.பி.எஸ்ஸின் சிறந்த பணிகளுக்காக 2007-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் பெற்றார். தொடர்ந்து 2016-ஆம் ஆண்டும் குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தை பெற்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றிய நிலையில் பணி ஓய்வு பெற்றார் ரவி.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications