பழனி தண்டாயுதபாணி கோவில்.. அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வு! கருவறையிலும் சிலைகள் ஆய்வு
சென்னை: பழனியில் வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பழனி மலைக் கோவில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையை ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக இருப்பது பழனி திருக்கோயில். தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகையைக் கொண்ட கோயில்களில் ஒன்றாக இந்த தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இருக்கிறது.
இந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குக் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

பழனி திருக்கோயில்
அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டிலேயே பழனியில் கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். இருப்பினும், கும்பாபிஷேகம் நடத்தவில்லை என்பதால் பல தரப்பினரும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர். இதையடுத்து 2019 டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்தப் பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. இருப்பினும், அதற்குள் கொரோனா வந்ததால் கும்பாபிஷேக பணிகள் ரொம்பவே மெதுவாகவே நடந்து வந்தன.

கும்பாபிஷேகம்
இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பழனி கோயிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். மொத்தம் ரூ.16 கோடி செலவில் கோயிலை அழகுபடுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெள்ளி மற்றும் தங்கத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டும் 5 கேடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மூலம் 26 பணிகள் உபயதாரர்கள் மூலம் 62 பணிகள் என மொத்தம் 88 பணிகள் நடைபெற்று வருகிறது.

விறுவிறு பணிகள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்டிடப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. கடந்த 25ஆம் தேதி பழனியில் கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆய்வு
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே பழனி மலைக்கோவில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காகத் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் குங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தரும் வழிகாட்டுதல் படி பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனி மலைக் கோவில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையைச் சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையில் பேரூர் மற்றும் சிறவை ஆதீனங்கள், ஸ்தபதிகள், சித்த மருத்துவர்கள், அர்ச்சகர்கள், இணை ஆணையர் நடராஜன் உடனிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாலை வரை இணையானையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications