28 நாள் இல்லை.. 42 நாட்கள்.. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட புது ஷெட்யூல்.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பு ஊசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளும் கால அளவில் சில மாற்றங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

Revised covid-19 vaccine 2nd dose schedule is here

இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டு 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது ஆரம்பத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறை ஆக இருந்தது.

ஆனால் இப்போது 42 நாட்கள் முதல் 56 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தடுப்பூசியின் வீரியம் இன்னமும் அதிகரிக்கும் என்று அரசு தெரிவிக்கிறது. அதேநேரம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு மேலே கால தாமதமாக சென்று இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளக்கூடாது என்பது முக்கியமாகும்

இதன்படி பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் இரண்டாவது போட்டுக் கொள்ளலாம்.

Revised covid-19 vaccine 2nd dose schedule is here

பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி உள்ளே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இப்படியாக ஒவ்வொரு நாளையும் நீங்கள் கூட்டிக்கொண்டு போகலாம். அதற்கான அட்டவணை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பார்த்து பாரத்பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பு கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் முந்தைய நடைமுறை அப்படியே பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வாரங்கள் மதுல் அதிகபட்சமாக ஆறு வாரங்களுக்குள் கோவேக்சின் 2வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த அட்டவணையும் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நீங்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்திருந்தால், அந்த ஷெட்யூலை பாருங்கள், கோவேக்சின் போட்டிருந்தால், அதற்கான ஷெட்யூலை பாருங்கள். நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+