வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள்!
சென்னை: திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை சென்னை மாநகர ஆணையர் வெளியிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 4 நாட்கள், வாக்காளர் பட்டியல் சேர்க்கை, பெயர் நீக்க மற்றும் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டன. அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
வாக்காளர் சிறப்பு முகாம்கள்
வாக்காளர் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 69,000 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும், வட்டார தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்த திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டு இருக்கிறார். மற்ற மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 3.11 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 3.24 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 3ஆம் பாலின வாக்காளர்கள் 9,120 பேர் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளில் 40.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40,15, 878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,16,642 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,78,980 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications