ரேஷன் கடைகளுக்கு போவீங்களா.. குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அறிய வேண்டியவை.. அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் டிசம்பர் மாதமே வெளியிடப்படும். அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் 16-ந்தேதி வெளியாகி இருந்தது. இந்த விடுமுறையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் அரசு திருத்தி அமைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆகவும் செயல்படுகின்றன. இதேபோல ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்படுகின்றன. இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சுமார் 2 கோடி பேர் பெற்று வருகிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க எப்போது செல்லலாம்.. எப்போது எல்லாம் அங்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பலருக்கும் தெரியாது.

இதை அறிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் டிசம்பர் மாதமே வெளியிடப்படும். அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் 16-ந்தேதி வெளியாகி இருந்தது. இந்த விடுமுறையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் அரசு திருத்தி அமைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட விடுமுறைதின பட்டியல் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
குடியரசு தினம் ஜனவரி 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), தைப்பூசம் பிப்ரவரி 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ரம்ஜான் மார்ச் 31-ந்தேதி (திங்கட்கிழமை), மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 10-ந்தேதி (வியாழக்கிழமை), தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ந்தேதி (திங்கட்கிழமை), புனித வெள்ளி ஏப்ரல் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மே தினம் மே 1-ந்தேதி (வியாழக்கிழமை).
பக்ரீத் ஜூன் 7-ந்தேதி (சனிக்கிழமை), மொகரம் ஜூலை 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை), கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை), விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27-ந்தேதி (புதன்கிழமை), மிலாடி நபி செப்டம்பர் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை), ஆயுத பூஜை அக்டோபர் 1-ந்தேதி (புதன்கிழமை), விஜயதசமி, காந்திஜெயந்தி அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை), தீபாவளி அக்டோபர் 10-ந்தேதி (திங்கட்கிழமை), கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-ந்தேதி (வியாழக்கிழமை).
மேலும், பொது வினியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தொடர்பான அவசியம் சார்ந்து மேற்கண்ட விடுமுறை நாட்கள் குறித்து தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் அல்லது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனரகத்தால் அறிவிப்பு வெளியிடப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications